Must Watch Trisha Movie on OTT : தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் தொடர் கொலைகளுக்கு பின்னால் இருக்கு மர்மங்களை தோலுரிக்கும் படத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, உண்மைக் குற்ற வழக்குகளை அடிப்படையாகக் கொண்ட கிரைம் த்ரில்லர்கள், திரையரங்குகளிலும் ஓடிடி தளங்களிலும் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளன. அந்த வரிசையில் கவனம் பெற்ற படங்களில் ஒன்றைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம். அப்படத்தில் நாயகியாக திரிஷா நடித்திருக்கிறார். அது என்ன படம் என்பதை பார்க்கலாம்.
25
த்ரிஷா நடித்த படம்
அந்த படத்தின் பெயர் ‘தி ரோட்’. தமிழ்நாட்டில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படம், தொடக்கம் முதல் இறுதி வரை பரபரப்பான சஸ்பென்ஸுடன் பயணிக்கிறது. கதைப்படி தேசிய நெடுஞ்சாலையில், ஒரே மாதிரியான மர்ம மரணங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஆரம்பத்தில் விபத்துகளாக தோன்றும் இந்த சம்பவங்களுக்குப் பின்னால் வேறு ஒரு கொடூரமான உண்மை இருப்பது பின்னர் தெரிய வருகிறது. இந்த மர்ம சம்பவங்களில் தனது குடும்பத்தினரையும் இழக்கும் நாயகி, உண்மையை கண்டுபிடிக்க தானே களத்தில் இறங்குகிறார்.
35
கதைக்களம்
விசாரணை முன்னேறும்போது, தனது குடும்பத்தின் மரணம் சாதாரண விபத்து அல்ல, திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியின் ஒரு பகுதி என்பதை அவர் அறிகிறார். அதன் பிறகு வெளிவரும் ஒவ்வொரு உண்மையும் கதையை மேலும் விறுவிறுப்பாக்குகிறது. இந்த தொடர் கொலைகளுக்கு காரணமானவர்கள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? நாயகி எப்படி அந்த மர்மத்தை உடைக்கிறார்? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை கொடுக்கும் படம் தான் தி ரோட். திரிஷா நடிப்பில் வெளிவந்த அண்டர்ரேட்டட் படங்களில் இதுவும் ஒன்றாகும்.
'ரிவெஞ் இன் 462 கிலோமீட்டர்' என்ற டேக் லைனுடன் வெளியான 'தி ரோட்' படத்தை அருண் வசீகரன் இயக்கியுள்ளார். த்ரிஷா இந்த கதையின் பில்லர். முழு படத்தையும் தாங்கிச் செல்லும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் மலையாள நடிகர் ஷபீர், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷ்யாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்த படத்தின் பின்னணி இசை, சஸ்பென்ஸ் காட்சிகளுக்கு கூடுதல் வலிமை சேர்க்கிறது. ஒளிப்பதிவும், திரைக்கதையின் வேகமும், கிரைம் த்ரில்லர் ரசிகர்களை கடைசி வரை இருக்கையில் கட்டிப்போடும் வகையில் அமைந்துள்ளது.
55
எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் மட்டுமல்லாது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் இந்த படம் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழியிலும் பார்க்கும் வசதி உள்ளது. சஸ்பென்ஸ், கிரைம், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு 'தி ரோட்' நிச்சயம் தவறவிடக் கூடாத திரைப்படமாக இருக்கும். இப்படம் தியேட்டரில் கடந்த 2023-ம் ஆண்டு ரிலீஸ் ஆனபோது பெரியளவில் கொண்டாடப்படாவிட்டாலும், ஓடிடியில் பார்க்க பக்காவான படமாக இருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.