இதையடுத்து, ‘ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன்' என கார்த்தியின் டுவிட்டுக்கு ரிப்ளை செய்திருந்தார் திரிஷா. உடனே சுதாரித்துக் கொண்ட கார்த்தி, ‘கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே.. ?’ என வந்தியத்தேவனாக மாறி ஒரு கேள்வியை கேட்டார்.
இதற்கு ‘வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு? கொடுத்த பொருளை திருப்பி கேட்கபோகுறீர்களா?’ என திரிஷா ரிப்ளை கொடுக்க, கார்த்தி பதிலுக்கு ‘ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி. நான் பழையாறை வந்ததும் நாம் vibe ஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன்….’ எனக்கூறினார். இப்படி குந்தையாகவும், வந்தியத்தேவனாகவும் மாறி திரிஷாவும், கார்த்தியும் உரையாடிக்கொண்டது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... Samantha : ஹீரோக்களுக்கு போட்டியாக... சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் போட்டோ போட்டு ரசிகர்களை மெர்சலாக்கிய சமந்தா