நாஞ்சில் விஜயன் மீதான புகாரை வாபஸ் பெற்ற திருநங்கை வைஷு; பப்ளிசிட்டிக்காக டிராமாவா?

Published : Sep 17, 2025, 07:39 PM IST

Transgender Vaishu withdrawn Cheating Complaint against Nanjil Vijayan : சில தினங்களுக்கு முன்பு விஜய் டிவி காமெடியன் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் புகார் கொடுத்த நிலையில், அதை தற்போது வாபஸ் பெற்றுள்ளார்.

PREV
15
சர்ச்சை பிரபலம் நாஞ்சில் விஜயன்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பல காமெடி நடிகர்கள் உருவாகி உள்ளனர். இவர்களில் அதிகம் சர்ச்சையில் சிக்கிய பிரபலம் என்றால் அது நாஞ்சில் விஜயன் தான். வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் பற்றி பேசியது, T 20 கிரிக்கெட் விளையாட்டின் டிக்கெட்டை அதிக தொகைக்கு விற்பனை செய்தது போன்ற சர்ச்சைகளில் சிக்கி பின் அதில் இருந்து மீண்டார்.

அக்காவிற்கு ஷாக் கொடுத்த பாண்டியன்: அரசியின் முடிவு இது தான்; திட்டவட்டமாக பதில் சொன்ன பாண்டியன்!

25
நாஞ்சில் மீது பாலியல் புகார்:

இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு, மேரி என்பவரை திருமணம் செய்துக்கொண்ட நிலையில், சமீபத்தில் தான் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. திருமணத்திற்கு பின்னர் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த நாஞ்சில் விஜயன் மீது, கடந்த வாரம் திருநங்கையும், நடிகையுமான வைஷு என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இறந்து போன மகளுடன் தினமும் பேசுகிறேன் - விஜய் ஆண்டனி கூறிய ஆச்சர்ய தகவல்!

புகார் கொடுத்த பின்னர் செய்தியாளர்களிடம் வைஷு பேசும் போது, "நானும் நாஞ்சில் விஜயனும் கடந்த 5 வருடங்களாக கணவன் மனைவி போல் வாழ்ந்து வருகிறோம். அவர் தன்னை பலமுறை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டார். அவர் திருமணம் செய்துள்ள மரியாவின் அம்மா எனக்கு நன்கு தெரிந்தவர். என்னால் தான் அவருடைய திருமணம் நடந்தது.

35
வைஷு கொடுத்த புகார் என்ன?

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து என்னுடன் பழகி வந்தார். நாங்கள் காதலித்தது அவருடைய வீட்டில் உள்ள அனைவருக்குமே தெரியும். ஒரே வீட்டில் என்னையும், அவர் மனைவியையும் வைத்து குடும்பம் நடத்துவதாக கூட கூறினார். ஆனால் கடந்த 6 மாதமாக, அதாவது குழந்தை பிறந்த பின்னர் அவர் என்னை முற்றிலும் புறக்கணித்து விட்டார். இன்ஸ்ட்டாகிராம் , ஃபேஸ் புக், வாட்ஸ் ஆப் போன்ற அனைத்திலும் என்னை பிளாக் செய்து விட்டார். 

பிக்பாஸ் 9 போட்டியில் களமிறங்கும் தேசிய விருது பிரபலம் முதல் வாரிசு நடிகர் வரை! கன்ஃபாம் லிஸ்ட்!

அவரை தொடர்பு கொள்ள பலகட்ட முயற்சி செய்தும் அது முடியாமல் போகவே இந்த புகாரை கொடுத்துள்ளேன். அவரை தண்டிக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல... அவர் திருமணத்திற்கு பின்னரும் எப்படி என்னுடன் பழகி வந்தாரோ அதே போல் மீண்டும் என்னுடன் பேச வேண்டும்... பழக வேண்டும் என கூறி இருந்தார்.

45
நாஞ்சில் விஜயன் கொடுத்த விளக்கம்:

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, ஆரம்பத்தில் அமைதி காத்துவந்த நாஞ்சில் பின்னர் இதுகுறித்து தானாக முன்வந்து தன்னுடைய மனைவி மரியாவுடன் சேர்ந்து தன்னிலை விளக்கம் கொடுத்தார். அதில் வைஷு கொடுத்த புகாரில் துளியும் உண்மை இல்லை என்றும், அவரை ஒரு தோழியாகவும் - சகோதரியாகவும் மட்டுமே பார்த்ததாக தெரிவித்திருந்தார்.

55
யார் மீது தவறு?

சமூக வலைத்தளங்களிலும், இது பேசு பொருளாக மாறிய நிலையில்... நாஞ்சில் - வைஷுவுக்கு மிகவும் நெருக்கமான நடிகை ஷகீலா, சீரியல் நடிகை பாலாம்பிகா, மற்றும் நண்பர்கள் வட்டாரத்தை சேர்ந்த அனைவரும் வைஷு நாஞ்சில் மீது பொய் குற்றசாட்டை வைத்துள்ளதாகவும், நாஞ்சில் மீது எந்த தவறும் இல்லை என கூறி வந்தனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories