பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 588ஆவது எபிசோடில் மீண்டும் அரசியை மணமுடிக்க கேட்க வந்த தனது அக்காவிற்கு பாண்டியன் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.
ஷாக் கொடுத்த பாண்டியன், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
அரசி மற்றும் குமரவேல் தொடர்பான காட்சிகள் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே குமரவேல் மீது கொடுத்த புகாரை அரசி வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து குமரவேல் அரசி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இந்தக் காட்சி நியூஸ் சேனல்களில் வெளியானதை பார்த்த பாண்டியனின் அக்கா உமா மகேஸ்வரி அரசியை தனது மகன் சதீஷிற்கு மணமுடிக்க கேட்க வந்தார்.
ஆனால், அவர் வந்தது பாண்டியனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. உமா நடந்த எல்லாவற்றையும் மறந்துவிட்டு அரசிக்கும் தனது மகன் சதீஷிற்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று நான் கேட்க வந்தேன். உங்களுடைய முடிவு என்ன என்று பாண்டியனை கேட்டார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 588ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம். அக்கா இப்படி கேட்க, அதற்கு பதிலளித்த பாண்டியன் இனி எந்த முடிவையும் நான் எடுப்பதாக இல்லை.
அரசியிடம் தான் இதைப் பற்றி கேட்க வேண்டும் என்றார். உடனே அரசியிடம் சென்று பேச, அவர் அப்பா எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம். நான் குமரவேலுவை நினைத்துக் கொண்டு சொல்லவில்லை. ஒன்று மாற்றி ஒன்று நடந்து கொண்டே இருந்து இப்போது கல்யாணமா? வேண்டாம் அப்பா என்றார். குமரவேல் கடத்தி சென்றது, சதீஷ் உடன் நிச்சயத்தார்த்தம், அதன் பிறகு தாலி கட்டிக் கொண்டு குமரவேல் வீட்டிற்கு சென்றது.
பின்னர், கோர்ட் கேஸ், இப்போது மீண்டும் கல்யாணமா? என்று எவ்வளவு தான் தாங்க முடியும். அதனால், எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை அப்பா என்று சொல்லிவிட்டார். நான் படிக்கிறேன், படித்து வேலைக்கு போறேன் அப்பா என்றார். அரசியின் பேச்சைக் கேட்ட பாண்டியன், உடனே தனது அக்காவிடம் இதைப் பற்றி எல்லாவற்றையும் தெளிவாக எடுத்துச் சொன்னார். உடனே சதீஷ், மாமா மாமா என்று கெஞ்ச இல்லை மாப்பிள்ளை உங்களுக்கு வேறேதாவது ஒரு நல்ல பொண்ணா பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார். அரசி படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்றார்.
56
அடிக்கடி குமாரிடம் வந்து தூது சொன்ன சுகன்யா
இதற்கிடையில் பழனிவேலுவின் மனைவி சுகன்யா அடிக்கடி குமரவேல் வீட்டிற்கு சென்று முதலில் அரசியை திருமணம் செய்து கொள்ள கேட்பதற்கு பாண்டியனின் அக்கா வந்திருக்கிறார் என்றார். அதற்கு காந்திமதி மற்றும் குமரவேல் இருவரும் உனக்கு அவ்வளவு தாண்டா. அவளாவது திருமணம் செய்து கொண்டு நன்றாக இருக்கட்டும் என்றார். இதைத் தொடர்ந்து மீண்டும் பாண்டியன் வீட்டிற்கு சென்று என்ன நடந்தது என்பதை பார்த்து தெரிந்து கொண்டு மீண்டும் குமரவேல் வீட்டிற்கு வந்தார். அப்போது அரசிக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டார் என்றார்.
66
கல்யாணம் வேண்டாம் என்று சொன்ன குமரவேல், அரசி
இதைக் கேட்ட காந்திமதி குமாரு நீயும் உனக்கு வேறொரு பெண்ணுடன் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிட்ட, இப்போது அரசியும் அவளுக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிட்டாள். நீ என்ன நினைக்கிற என்று எனக்கு தெரியும், ஆனால், அரசி என்ன நினைக்கிறாள் என்று எனக்கு தெரியாது. எது எப்படியோ ஆண்டவன் கணக்கு என்று ஒன்று இருக்கிறது. அதுப்படியே எல்லாம் நடக்கட்டும் என்றார். அதோடு, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளைய காட்சியில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.