அடப்பாவமே இதற்காகவா முத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்? சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

Published : Sep 17, 2025, 09:35 AM IST

Siragadikka Aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க போலீசார் வீட்டுக்கு வந்த நிலையில், அடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் பிரின்சிபல் மீது கல்லை எறிந்ததற்காக முத்து மீது பழி விழுகிறது. தான் அந்த தவறை செய்யவில்லை என சொல்லியும் யாருமே நம்பவில்லை. போதாததற்கு விஜயாவும் ஸ்கூலுக்கு வந்து முத்துவை அடித்தது மட்டுமின்றி, இவன் அந்த மாதிரி செய்யக்கூடியவன் தான் என்று சொன்னதால், அவர் இந்த தவறை செய்திருப்பான் என அனைவரும் நம்புகிறார்கள். தனக்கு யாருமே சப்போர்ட் செய்யாததால் என்ன செய்வதென்று தெரியாமல் வாயடைத்துப் போய் நிற்கிறான் முத்து. மேலும் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவு வருகிறது.

24
முத்துவை அழைத்து சென்ற போலீஸ்

இதையடுத்து முத்துவின் வீட்டுக்கு வரும் போலீசார் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க கோர்ட் உத்தரவிட்டிருப்பதாக கூறுகின்றனர். தான் அங்கு செல்ல மாட்டேன் என அழுது கதறுகிறார் முத்து. அவருக்கு அண்ணாமலை போலீஸ் காலிலேயே விழப்போகிறார். ஆனால் கொஞ்சம் கூட இறக்கம் காட்டாத விஜயா, அவனை அழைத்துச் செல்லுங்கள் அங்கு சென்றாலாவது இவர் திருந்துகிறானா என்று பார்ப்போம் என சொல்லிவிடுகிறார். பெற்ற தாயே கூறியதை அடுத்து முத்துவை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். இதை மீனாவிடம் சொல்லி அழுகிறார் முத்து.

34
கண்ணீர் சிந்திய முத்து

கிரீஷுக்கு இதுமாதிரி நிலைமை வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் அவனுக்காக போராடி வருவதாக கூறுகிறான் முத்து. அதுமட்டுமின்றி சிறுவயதில் இருந்து தாய் பாசமே கிடைக்காமல் வளர்ந்ததால் தான் அன்று அம்மா கையால் ஒருவாய் சோறு சாப்பிட்டதற்கு ஏங்கி ஏங்கி அழுதேன் என மீனாவிடம் ஃபீல் பண்ணி பேசுகிறார். மீனாவும் அவரை சமாதானப்படுத்துகிறார். பின்னர் மறுநாள் ஸ்கூலில் கிரீஷுக்கு அஜய்யின் தந்தை டெஸ்ட் வைக்க வக்கீல் உடன் வருகிறார். அப்போது அவனுக்கு எந்தமாதிரியான டெஸ்ட் வைப்பீர்கள் என்பதைக் கேட்டு தெரிந்துகொள்கிறார் பள்ளியின் மேனேஜர்.

44
பாஸ் ஆன கிரீஷ்

இதையடுத்து அந்த வக்கீல் வைத்த டெஸ்ட்டில் கிரீஷ் பாஸ் ஆகி விடுகிறான். இதனால் அவன் வேண்டுமென்றே அஜய்யை தாக்கவில்லை என்பது உறுதியானதை அடுத்து, அவன் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக் கொள்வதாக கூறுகிறார் அஜய்யின் தந்தை. இதைக்கேட்ட முத்து சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போகிறான். தன்னைப்போன்ற ஒரு நிலைக்கு கிரீஷ் சென்றுவிடக் கூடாது என்பதற்காக படாத பாடு பட்டி, அவனை காப்பாற்றிவிடுகிறார் முத்து. இந்த சந்தோஷமான விஷயத்தை முத்து தன்னுடைய அப்பா அண்ணாமலைக்கு போன் போட்டு சொல்கிறார். இதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories