பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் அரசி பற்றி விஷயம் செய்தியாக வெளியான நிலையில் அதைப் பார்த்துவிட்டு பாண்டியனின் அக்கா வீட்டிற்கு வந்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும், ஏதோ நடக்கும் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில் தனது பேரை காப்பாற்றிய மருமகன் பாண்டியன் கையை பிடித்து மாமியார் காந்திமதி கதறி அழுது தனது நன்றியை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 587ஆவது எபிசோடில் அரசி மற்றும் குமரவேல் தொடர்பான கோர்ட் காட்சிகள் செய்தியாக வெளியானது. இதில், அரசி மீது எந்த தவறும் இல்லை. குமரவேல் தான் தான் செய்த தவறுக்காக அரசியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதைப் பார்த்த உமாவின் மகன் சதீஷ், அரசி மீது தவறு இல்லை என்பதை அறிந்து மீண்டும் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.
இதைப் பற்றி தனது அம்மாவிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார். அவரும் சரி, அரசியை மீண்டும் பெண் கேட்டு செல்வோம் என்று முடிவெடுத்தனர். அடுத்த காட்சியாக குமரவேல் மற்றும் காந்திமதி இருவரும் பேசிக் கொண்டனர். அதில், காந்திமதி தான் பாண்டியன் வீட்டிற்கு சென்று பாண்டியனிடமும், அரசியிடமும் பேசினார். அரசி தான் உன்னுடைய கேஸை வாபஸ் வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறாள். அவளுக்கு அப்படியொரு மனசு. உண்மையில் அரசி ரொம்ப நல்லவள். பக்குவமான பெண் என்று பேசிக் கொண்டிருந்தார்.
குமரவேலுவிற்கு அரசியை காதலித்து திருமணம் செய்ய ஆசை
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த குமரவேலுவிற்கு மீண்டும் அரசியை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை வந்தது. இதைப் பற்றி காந்திமதியிடம் கூறவே, கடவுளின் சித்தம் அதுவாக இருந்தால் அப்படியே நடக்கும். இறைவன் விட்ட வழி எதுவோ அதுவே நடக்கட்டும் என்றார். இதைத் தொடர்ந்து கதிர் மற்றும் ராஜீ தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு கடைசியாக உமா மற்றும் சதீஷ் இருவரும் பாண்டியனின் வீட்டிற்கு வந்தனர்.
56
உமா மற்றும் சதீஷைப் பார்த்து ஷாக்
அப்போது வீட்டு வாசல் வரை வந்த உமா (பாண்டியனின் அக்கா) என்ன பேய பாத்தமாதிரி பாக்குறீங்க. உள்ளே வரலாமா என்று கேட்க, பாண்டியனோ வீட்டிற்குள் வர சொல்கிறார். ஆனால், அவரை உட்கார சொல்லவே இல்லை. இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் பாண்டியனுக்கு மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உமா மற்றும் சதீஷைப் பார்த்து ஷாக் இருந்தது. ஏனெனால் உமா செய்த வேலை அப்படி. குடும்பத்திற்கு சாபம் விட்டுச் சென்றார். இப்போது நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்ப வந்துள்ளார். அவரது கணவர் வேறொரு சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் இந்த காட்சிகள் இல்லை.
66
அரசிக்கும் சதீஷூக்கும் கல்யாணம்
ஏற்கனவே அரசி குமரவேல் பற்றி என்னிடம் கூறியிருந்தால். மேலும், அவன் இனிமேல் தனது வாழ்க்கையில் இல்லை என்றும் கூறியிருந்தார். இப்படி அம்மாவும், புள்ளையும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்த நிலையில் கடைசியில் பழைய விஷயங்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு இனி அரசிக்கும் சதீஷூக்கும் கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறோம் என்று வெட்டு ஒன்னு துட்டு ரெண்டு என்று பேசிவிட்டார். இதை கேட்ட பாண்டியன், கோமதி, அரசி உள்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.