வாத்தியார் மண்டையை உடைத்த மனோஜ்; மாட்டிக் கொண்ட முத்துவை அடிவெளுத்த விஜயா..! சிறகடிக்க ஆசை சீரியல்

Published : Sep 16, 2025, 11:24 AM IST

Siragadikka Aasai Serial : சிறகடிக்க ஆசை சீரியலில் பள்ளியில் படிக்கும் போது மனோஜ் செய்த தவறுக்கு முத்து மீது பழி விழுகிறது. அதன் பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து தன்னோடு இருந்தால் உயிருக்கே ஆபத்து என ஜோசியர் சொன்னதைக் கேட்டு, அவனை 6 ஆண்டுகள் பிரிந்தே வாழ்ந்த விஜயா, ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் பாட்டி வீட்டில் இருந்து முத்துவை தன்னுடன் அழைத்து வருகிறார். பாட்டியை விட்டு பிரிய மனமின்றி, அங்கிருந்து வர மறுத்த முத்துவை தரதரவென இழுத்து வந்துவிட்டார் விஜயா. இங்கு வந்தும் கோபத்தில் இருக்கும் முத்து சாப்பாட்டை கீழே தள்ளிவிட்டு அடாவடி செய்ததை பார்த்து கடுப்பான விஜயா, அவனது காலில் சூடு வைக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

24
முத்து - மனோஜ் சண்டை

பக்கத்து வீட்டு பையன் வீடியோ கேம் ஆகியதை பார்த்த மனோஜ், அவனிடம் இருந்து அதை பிடுங்கி வந்து விளையாடிவிட்டு, முத்துவிடம் கொடுத்துவிட்டு செல்கிறான். அப்போது பக்கத்து வீட்டு பையனின் அம்மா இங்கே வந்து விஜயாவிடம், உங்கள் மகன் என்னுடைய பையன் விளையாடிய வீடியோ கேமை பிடுங்கி அடிச்சு வாங்கிட்டு வந்துட்டான் என சொல்ல, உடனே மனோஜ், முத்து தான் அவனிடம் இருந்து அடிச்சு வாங்கி வந்ததாக மாட்டிவிடுகிறான். இதனால் கோபமான முத்து, மனோஜை அடிக்கிறான். இதனால் கடுப்பாகும் விஜயா, முத்துவை திட்டிவிடுகிறார்.

34
ஸ்கூலில் முற்றிய மோதல்

பின்னர் மறுநாள் ஸ்கூலில் ரேங்க் கார்டு கொடுக்கப்படுகிறது. முத்து கடைசி ரேங்க் வாங்குகிறார். மனோஜ் இரண்டாவது ரேங்க் வாங்குகிறார். அப்போது முத்துவை பார்த்து இப்படி கடைசி ரேங்க் வாங்கிருக்கியே உன்னையெல்லாம் என் தம்பினு சொல்லவே அசிங்கமா இருக்கு என சொல்கிறார் மனோஜ், அதுமட்டுமின்றி பாட்டி தான் உன்னை இப்படி ரெளடி ஆக்கிவிட்டார் என்று சொல்கிறார். இதைக்கேட்டு டென்ஷன் ஆன முத்து, மனோஜ் உடன் சண்டை போடுகிறார். அப்போது அங்கு வரும் ஆசிரியர் முத்துவை கண்டித்து அவனை முட்டிபோட வைக்கிறார். முதல் ரேங்க் எடுத்த பையன் மீது கடுப்பில் இருக்கும் மனோஜ், அவனை கல்லால் தாக்க முயற்சிக்கிறான்.

44
முத்துவை அடிக்கும் விஜயா

அப்போது அவன் மாடியில் இருந்து வீசிய கல், கீழே சென்றுகொண்டிருந்த ஹெட் மாஸ்டர் தலையில் விழுந்துவிடுகிறது. உடனே பதறிப்போன மனோஜ், முத்துவை எட்டிப் பார்க்க சொல்கிறார். அதைக்கேட்டு முத்து எட்டிப்பார்த்தது, அவன் தான் கல்லால் எறிந்திருப்பான் என அனைவரும் சந்தேகப்படுகிறார்கள். மேலே வந்து முத்துவை பிடித்து ஆசிரியர் ஒருவர் விசாரிக்க, அவரிடம், இவன் தான் கல்லை கொண்டு எறிந்தான் என மாட்டி விடுகிறார் மனோஜ். பின்னர் தகவல் அறிந்து ஸ்கூலுக்கு வரும் விஜயா, முத்துவை அனைவர் முன்னிலையிலும் அடி வெளுக்கிறார். இதன் பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories