எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்து வரும் ரெளடிகள், அவரைப்பற்றி தீவிரமாக விசாரித்து வரும் நிலையில், அடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் காட்டுக்குள் என்கவுண்டர் செய்யப்பட்டதாக கூறப்படும் ஜீவானந்தம் மற்றும் பார்கவியை தேடி ஜனனி, பெரியகுளம் செல்கிறார். அங்கு ஒரு காட்டுப் பகுதிக்குள் ஜனனி காரில் சென்றபோது அந்த பகுதியில் தேடுதல் பணியில் இருந்த போலீஸ் அவரிடம் விசாரிக்கிறார். அப்போது சும்மா சுற்றிப் பார்க்க வந்ததாக கூறும் ஜனனியிடம், இது ரொம்ப டேஞ்சர் ஆன ஏரியா என சொல்லி திருப்பி அனுப்பி விடுகிறார். ஜனனி அங்கு வந்ததை பார்த்த பார்கவி, அவரை சேஸ் செய்து செல்லும் முன் ஜனனி அங்கிருந்து காரில் சென்றுவிடுகிறார். இதையடுத்து அவர் காட்டுக்குள் சென்று பார்க்கும் போது ஜீவானந்தம் காணாமல் போகிறார்.
24
காப்பாற்றப்படும் ஜீவானந்தம்
அவரைத் தேடி செல்லும் பார்கவி, ஒரு பஞ்சு மில்லுக்கு செல்கிறார். அங்கு ஒரு பெரியவரை பார்த்ததும் பார்கவி பதறி ஓட, நீ தேடி வந்த ஆள் இங்க தான் இருக்கிறார் என்று சொன்னதும் நின்றுவிடுகிறார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது ஜீவானந்தம் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். அவரைக் காப்பாற்றிய நபர், தான் ஒரு மிலிட்டரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர் என்றும், தற்போது தன் கையில் அடிபட்டுள்ளதால், தான் சொன்னபடி நீ செய்தால் ஜீவானந்தத்தை காப்பாற்றிவிடலாம் என கூறுகிறார். அந்த டாக்டரின் பேச்சைக் கேட்டு ஆபரேஷன் செய்ய சம்மதிக்கிறார் பார்கவி.
34
ஜனனியை நெருங்கும் ரெளடிகள்
மறுபுறம் ஆதி குணசேகரன் அனுப்பிய ஆட்கள், ஜனனியை வலைவீசி தேடி வருகிறார்கள். ஒரு கடையில் ஜனனி தண்ணீர் வாங்கி குடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த ரெளடிகள் அங்கும் வந்துவிடுகிறார்கள். இதனால் பதறிப்போகும் ஜனனி, அந்த கடையில் ஒளிந்துகொள்கிறார். அங்கு வந்து ஜனனியின் போட்டோவை காட்டி விசாரிக்கிறார்கள். அந்த கடைக்காரர் தனக்கு தெரியாது என சொல்கிறார். அந்த சமயத்தில் அங்கு ஜனனி பேசிவிட்டு சார்ஜ் போட்ட போனுக்கு நந்தினியிடம் இருந்து அழைப்பு வருகிறது. அந்த போனை எடுத்து ரெளடி ஒருவர் பேச முயல, கடைக்காரர் அந்த போனை பிடுங்கி விடுகிறார்.
அதே நேரத்தில் மறுபடியும் நந்தினி போன் போட முயலும் போது போன் சுவிட்ச் ஆஃப் ஆகிவிடுகிறது. இதையடுத்து தர்ஷன் தன்னிடம் உள்ள சார்ஜரை கொடுத்து சார்ஜ் போடச் சொல்கிறார். அவர் சார்ஜ் போட்டு மீண்டும் போன் செய்தால் நிச்சயம் ஜனனி ரெளடிகளிடம் சிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் நந்தினி ஜனனியை மீண்டும் அழைத்தாரா? ரெளடிகள் ஜனனியை கண்டுபிடித்தார்களா? ஜீவானந்தத்திற்கு வெற்றிகரமாக ஆபரேஷன் செய்தாரா பார்கவி? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும். இதனால் இனி வரும் எபிசோடுகள் அனல்பறக்க இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.