மலையாள சினிமாவின் முதல் கலர் படம்; அதை இயக்கி தயாரித்தது ஒரு தமிழர் தான் தெரியுமா?

Mollywood Cinema : மலையாள மொழியில் வெளியான முதல் கலர் திரைப்படத்தை இயக்கியது கோவையை சேர்ந்த ஒரு மெகா ஹிட் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TR Sundaram

தமிழ் மொழியை பொறுத்தவரை கடந்த 1918ம் ஆண்டு ஆர். நடராஜ முதலியார் என்பவருடைய இயக்கத்தில் வெளியான "கீச்சக்க வதனம்" என்கின்ற திரைப்படம் தான் முதல் தமிழ் திரைப்படமாக, அதுவும் மௌனமான சைலன்ட் திரைப்படமாக வெளியானது. அதன் பிறகு தொடர்ச்சியாக சில திரைப்படங்கள் ஓசை இல்லாமல் வெளியான நிலையில், கடந்த 1931ம் ஆண்டு எச்.எம் ரெட்டி இயக்கத்தில் வெளியான முதல் பேசும் தமிழ் திரைப்படம் தான் "காளிதாஸ்". 1918 ஆம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட 116 வருடங்களாக தமிழ் மொழி திரைப்படங்கள் பல்வேறு பரிமாணங்களை அடைந்து வருகின்றது. இந்திய திரை உலகை பொறுத்தவரை கோலிவுட் உலகிற்கு என்று ஒரு தனி அந்தஸ்து உலக அரங்கில் எப்போதும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் ஹீரோவுக்கு ஸ்ரீதேவியை திருமண செய்து வைக்க போடப்பட்ட பிளான்? போனி கபூரால் இடிந்து போன தாயார்!

Modern Theaters

ஆனால் மலையாள மொழி திரைப்படங்களில் நிலையே வேறு, கடந்த 15 ஆண்டுகளில் மலையாள மொழி திரைப்படங்கள் உலக அரங்கையே ஆச்சரியத்தில் அழுத்தி வரும் நிலையில், தமிழ் சினிமா தோன்றி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து தான் முதல் முதலில் ஒரு மலையாள மொழியில் திரைப்படங்கள் வெளியானது. கடந்த 1930 ஆம் ஆண்டு டேனியல் என்பவருடைய இயக்கத்தில் வெளியானது தான் "விதகுமாரன்" என்கின்ற திரைப்படம். இதுவே மலையாளத்தில் வெளியான முதல் திரைப்படமாகும். ஆரம்ப காலம் தொட்டு தொழில்நுட்ப ரீதியாக பெரிய அளவில் சாதனைகளை படைக்காத மலையாள சினிமா, கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் சினிமாவையே முந்தும் அளவிற்கு மிகச் சிறந்த கதை அம்சங்களோடு வலம் வந்து கொண்டிருக்கிறது.


Kandam Becha Kottu

இந்த சூழலில் கடந்த 1961ம் ஆண்டு மலையாள மொழியில் முழு நீள கலர் திரைப்படமாக வெளியானது தான் "Kandam Becha Kottu" என்கிற திரைப்படம். இந்த திரைப்படம் தான் மலையாள மொழியில் வெளியான முதல் கலர் படம். ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி, 1961 ஆம் ஆண்டு வெளியான இந்த முழு நீள கலர் படத்தை இயக்கியது டி.ஆர் சுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது. கோவையை சேர்ந்த டி ஆர் சுந்தரம் இந்திய திரையுலகமே போற்றும் மிகப்பெரிய இயக்குனராகம் தயாரிப்பாளராகவும் வலம் வந்தார். அது மட்டும் அல்ல, இன்றளவும் தமிழகத்தின் பெருமையாக திகழ்ந்துவரும் "மாடர்ன் தியேட்டர்ஸ்" என்கின்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும் இவர் தான். மலையாள மொழி படங்களை இயக்குவதற்கு முன்னதாகவே பல மெகா ஹிட் தமிழ் திரைப்படங்களையும் இவர் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

alibabavum 40 thirudargalum

1961 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அந்த முதல் கலர் திரைப்படத்தை இயக்கியதற்காக தேசிய விருதும் சுந்தரத்திற்கு வழங்கப்பட்டது. தமிழ் மொழியை பொறுத்தவரை கடந்த 1956 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான "அலிபாபாவும் 40 திருடர்களும்" என்கின்ற திரைப்பட தான் ஏவா கலரில் முதல் முதலாக எடுக்கப்பட்ட கலர் திரைப்படம். அந்த திரைப்படத்தை இயக்கியதும் சுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல தமிழில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான "மந்திரி குமாரி" மற்றும் "சர்வாதிகாரி" உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதும் இவர் தான்.

100 கோடி கிளப்பில் அதிக படங்களை வைத்திருக்கும் நடிகர்கள்! ரஜினி, ஷாருக்கானை முந்திய விஜய்!

Latest Videos

click me!