இந்திய சினிமாவில் தற்போது 1000 கோடி வசூல் என்பது புதிய மைல்கல்லாக உள்ளது. தங்கல், பாகுபலி 1, 2, கேஜிஎஃப் 1,2. RRR, ஜவான், பதான், கல்கி 2898 ஏடி என பல படங்கள் 1000 கோடி வசூலில் இணைந்துள்ளன. ஆனால் இந்திய சினிமாவில் ரூ.100 கோடி வசூல் என்பதே மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்பட்ட ஒரு காலமும் இருந்தது. 100 கோடி வசூல் செய்த பல படங்கள் உள்ளன. அந்த வகையில் அதிக 100 கோடி வசூல் படங்களை வைத்திருக்கும் நடிகர்கள் யார் தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சல்மான்கான் :
பாலிவுட்டின் உச்ச நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் என பன்முகங்களை கொண்ட அவர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டில் கோலோச்சி வருகிறார். அதிக 100 கோடி வசூல் படங்களை வைத்திருக்கும் நடிகர்களில் சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார். அவர் நடித்த படங்களில் 17 படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளன.