கோபத்தில் பாட்டை பாதியில் விட்டுச்சென்ற வைரமுத்து; பின் பா. விஜய் எழுதி மெகா ஹிட்டான பாடல்!

Lyricist Vairamuthu : சேரனின் திரை வாழ்க்கையில், அவருடைய திரைப்படங்களுக்கு மிக மிக அழகான பாடல்களை கொடுத்த மிக முக்கிய பாடல் ஆசிரியர் வைரமுத்து என்றால் அது நிச்சயம் மிகையல்ல. 

Vairamuthu

தமிழில் கமர்சியல் ரீதியான திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற மாபெரும் வெற்றி இயக்குனர் தான் கே.எஸ் ரவிக்குமார். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சூப்பர் ஹிட் இயக்குனர் தான் சேரன். பல திரைப்படங்களில் ரவிக்குமாருடைய இணைந்து பணியாற்றிய அவர், கடந்த 1997ம் ஆண்டு தமிழில் வெளியான "பாரதி கண்ணம்மா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் திரை உலகில் களமிறங்கினார்.

இந்த 27 ஆண்டுகால பயணத்தில் குறைந்த அளவிலான படங்களை தான் இயக்கியிருக்கிறார் என்றாலும், சேரனின் திரைக்கதை எழுதும் திறனுக்கு இணை அவரே என்று சொல்லும் அளவிற்கு, மிக நேர்த்தியான குடும்ப பங்கான பல திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு அவர் கொடுத்திருக்கிறார். இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "திருமணம்" என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்கியிருந்தார். நடிகராகவும் கடந்த 1990ம் ஆண்டு முதல் அவர் தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார்.

TRP-யில் விஜய் டிவி படு மோசம்! புதிய தொடர்களை வைத்து ரேட்டிங்கை அடிச்சு பறக்கவிடும் சன் டிவி!

Cheran

இந்த சூழலில் கடந்த 2000வது ஆண்டு முரளி மற்றும் பார்த்திபன் நடிப்பில் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் மெகா ஹிட் ஆன திரைப்படம் தான் "வெற்றி கொடி கட்டு". இளைஞர்கள், வெளிநாட்டு வேலையின் மீது உள்ள மோகத்தை விட்டு விட்டு, தனது சொந்த ஊரிலேயே பெரிய அளவில் பாடுபட்டால், நிச்சயம் முன்னேறி விடலாம் என்கின்ற ஒரு கதை அம்சத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பே அவ்வளவு அழகாக சொல்லி இருப்பார் இயக்குனர் சேரன். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை மீனா மற்றும் நடிகை மாளவிகா ஆகிய இருவரும் நடித்திருப்பார்கள்.


Cheran

2000வது ஆண்டு வெளியான "வெற்றி கொடி கட்டு" திரைப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். இந்த ஐந்து பாடல்களும் ஐந்து வெவ்வேறு பாடல் ஆசிரியர்களால் எழுதப்பட்டது. "சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா" என்கின்ற பாடலுக்கு வரிகள் எழுதியது தேவா. "லட்ச லட்சமா பணம் வரப்போகுது" என்கின்ற பாடலை எழுதியது ரவிசங்கர். "வள்ளி வள்ளி" என்கின்ற பாடலை எழுதியது கலைக்குமார், "தில்லேலே தில்லேலே" என்கின்ற பாடலை எழுதியது வைரமுத்து. அதேபோல பட்டி தொட்டி எங்கும் மெகா ஹிட் ஆன "கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு" என்கின்ற பாடலை எழுதியது பா. விஜய். 

ஆனால் உண்மையில் இந்த கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலை முதலில் தொடங்கி வைத்தது வைரமுத்து தான்.

Karupu Than Enaku Pudicha Song

அண்மையில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சித்ரா லக்ஷ்மணன் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அந்த பாடல் குறித்து பேசிய இயக்குனர் சேரன். சுமார் 24 ஆண்டுகளுக்கு முன்பு பல திரைப்படங்களில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பாடல்கள் வெளியானது. அந்த சூழலில் வைரமுத்து எழுதிய பாடல் தான் கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு. ஆனால் முழுக்க முழுக்க தமிழில் இருக்க வேண்டும் என்பதற்காக "கருப்பு தான் எனக்கு புடிச்ச வர்ணம்" என்று தான் முதலில் அவர் பாடலை எழுதினார். ஆனால் கொஞ்சம் ஆங்கிலத்தையும் கலந்து கொள்ளலாமே, முழுமையாக தமிழாக இருந்தால் அந்த பாடல் அவ்வளவு எடுபடாது என்று நான் எவ்வளவு கூறியும் அந்த பாடலை மேற்கொண்டு எழுத வைரமுத்து மறுத்தார். 

நடிச்ச 3 தமிழ் படமும் 100 கோடி வசூல்; யார் இந்த கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் குயின்?

இறுதிவரை சேரன் போராடியும் அவருக்கு கிறீன் சிக்னல் கிடைக்காத சூழ்நிலையில் தான், பா. விஜயை வைத்து அந்த பாடலை முழுமையாக எழுதி முடித்திருக்கிறார் சேரன். இன்றளவும் பலருக்கு அந்த பாடல் பிடித்தமான பாடல்களில் ஒன்று.

Latest Videos

click me!