டாப் ஹீரோவுக்கு ஸ்ரீதேவியை திருமண செய்து வைக்க போடப்பட்ட பிளான்? போனி கபூரால் இடிந்து போன தாயார்!

First Published | Nov 4, 2024, 5:39 PM IST

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, ஸ்ரீதேவியை ஒரு தமிழ் நட்சத்திர நடிகருக்கு திருமணம் செய்து வைக்க அவரது தாயார் விரும்பியதாகவும், இதற்கான பேச்சை அவர் எடுத்தபோது ஸ்ரீ தேவி நிராகரித்ததாக கூறப்படுகிறது.
 

Actress Sridevi

தென்னிந்திய திரையுலகில் மட்டும் இன்றி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. அழகில் ஸ்ரீதேவியை மிஞ்ச முடியுமா? என தற்போது வரை பலர் பேச்சு வழக்கில் கேட்பது உண்டு. அப்படி அழகிற்கு எடுத்து காட்டாக இருந்தவர் தான் ஸ்ரீதேவி. லேடி சூப்பர் ஸ்டார் என பாலிவுட் திரையுலகில் பெயர் எடுத்த இவரை, சூப்பர் ஸ்டாருக்கு ஸ்ரீதேவியின் அம்மா திருமணம் செய்து வைக்க நினைத்த நிலையில், அந்த கனவு நிறைவேறாமல் போனது.

Lady Super Star Sridevi

அழகு, நடிப்பு என எந்த விஷயத்திலும் ஸ்ரீதேவிக்கு ஸ்ரீதேவிதான் நிகர். தமிழ், தெலுங்குத் திரையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த அவர், பின்னர் பாலிவுட்டில் நுழைந்து ஹிந்தியில் ஒரு கலக்கு கலக்கினார். தென்னிந்திய திரையுலக நடிகைகளை பிரித்து பார்க்கும் பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் ஸ்ரீதேவி லேடி சூப்பர் ஸ்டார் எங்கிற இடத்தை பிடித்தது, ஆச்சர்யமாகவே பார்க்க பட்டது.

TRP-யில் விஜய் டிவி படு மோசம்! புதிய தொடர்களை வைத்து ரேட்டிங்கை அடிச்சு பறக்கவிடும் சன் டிவி!
 

Tap to resize

Actress Sridevi

ஹிந்தி படங்களில் இவர் நடிக்க செல்வதற்கு முன், தமிழில் ரஜினி மற்றும் கமல்ஹாசனுடன் மட்டுமே அதிக படியான படங்களில் நடித்தார். கமல்ஹாசன் ஸ்ரீதேவியை சிறு வயது முதலே பார்த்து வளர்ந்ததால், ஒரு தங்கையாக மட்டுமே பார்த்ததாக கூறப்படுகிறது. கமலுக்கு அடுத்தபடியாக ரஜினி படங்களில் தான் ஸ்ரீதேவி நடித்து வந்தார்.

Sridevi mother wish

இருவருக்கும் இடையே இருந்த நட்பும், மிகவும் வலுவானது என கூறப்படுகிறது. ரஜினிகாந்த் ஸ்ரீதேவியின் அம்மா மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தாராம். அதே போல் ஆரம்ப காலத்தில் தன்னுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை அவரிடம் பகிர்ந்த போது... ரஜினிகாந்த் மீது ஸ்ரீதேவியின் தாயாருக்கு மிகப்பெரிய மரியாதையே வந்துள்ளது. 

3 பழைய சீரியல்களை பேக்கப் பண்ணிவிட்டு... அடுத்தடுத்து 4 புதிய சீரியல்களை களமிறக்கும் சன் டிவி!
 

Sridevi and Rajinikanth

ரஜினிகாந்த் திரையுலகில் சாதிக்க வேண்டும் என நினைத்த போது... "நீங்க கவலை படாதீங்க தம்பி, பெரிய ஆளா வருவீங்க என' ஸ்ரீதேவியின் அம்மா வாழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், ரஜினிகாந்த் உடல் நலம் இல்லாமல் இருந்த போது, ஸ்ரீதேவி சாய் பாபா கோவிலுக்கு விரதம் இருந்ததாரம். இருவருக்கும் இடையே உள்ள நல்ல புரிதலை பார்த்து, ஸ்ரீதேவியின் தாயார் தன் மகளை ரஜினிகாந்துக்கு திருமணம் செய்து வைக்கலாம் என ஸ்ரீதேவியிடம் பேச்சுவாத்தை நடத்தியுள்ளார் ஆனால் அந்த சமயத்தில் ஸ்ரீதேவி தன்னுடைய அம்மாவின் ஆசையை நிராகரித்துள்ளார்.

Sridevi

தன்னுடைய மகளின் திருமணம் குறித்து அவரின் ஸ்ரீதேவியின் தாயார் பல கனவு கண்டு கொண்டிருந்த நேரத்தில் தான், பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க சென்ற ஸ்ரீதேவி, ஏற்கனவே திருமணமான போனி கபூரை காதலிக்க துவங்கினார். திருமணத்திற்கு முன்பே இவர் கர்ப்பமான நிலையில், இந்த தகவல் ஸ்ரீதேவியின் தாயாருக்கு பேரிடியாக அமைந்தது. பின்னர் ஸ்ரீதேவியின் திருமணம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்தது. ஸ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்து கொண்டதில் அவரின் அம்மாவுக்கு துளியும் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.

ஆத்தாடி? ஒரே நாளில் கோடீஸ்வரரான ஷாரிக்; இரண்டாவது கணவராக மாற இத்தனை கோடி வரதச்சணையா!
 

Latest Videos

click me!