2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் கம்மி பட்ஜெட்டில் ரிலீஸ் ஆன படம் ஒன்று, போட்ட காசைவிட 1200 சதவீதம் அதிகம் வசூலித்து இந்தியாவிலேயே அதிக லாபம் அள்ளிய படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.
2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு பெரியளவில் பாக்ஸ் ஆபிஸ் எதுவுமே கிடைக்கவில்லை. இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தக் லைஃப், ரெட்ரோ, குபேரா, விடாமுயற்சி ஆகிய படங்கள் ஏமாற்றம் அளித்தன. இந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிக வசூல் ஈட்டிய படம் என்றால் அது அஜித்தின் குட் பேட் அக்லி மட்டும் தான். அப்படம் 240 கோடி வசூலித்தது. மற்ற மொழிகளான தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகியமொழிகளில் வெளியான படங்கள் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துவிட்டன. குறிப்பாக இந்தியில் வெளியான சாவா திரைப்படம் 800 கோடிக்கு மேல் வசூலித்து அதிக வசூல் செய்த படமாக உள்ளது. இருந்தாலும் இந்த ஆண்டு அதிக சதவீதம் லாபம் ஈட்டிய படம் என்கிற சாதனையை தமிழ் படம் தான் தட்டிதூக்கி உள்ளது.
24
அதிக லாபம் அள்ளிய படம் எது?
அந்தப் படம் வேறெதுவுமில்லை... கடந்த மே மாதம் ரிலீஸ் ஆன டூரிஸ்ட் ஃபேமிலி தான். இப்படத்தை அபிஷன் ஜீவிந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இதில் சசிகுமார் மற்றும் சிம்ரன் ஜோடியாக நடித்திருந்தார்கள். மேலும் யோகிபாபு, கமலேஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தார். இப்படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் சார்பாக யுவராஜ் தயாரித்து இருந்தார். இவர் ஏற்கனவே குட் நைட், லவ்வர் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை தயாரித்தவர். இது அவரின் ஹாட்ரிக் ஹிட் படமாகும்.
34
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் கதை என்ன?
இலங்கையில் இருந்து இந்தியாவுக்குள் கடல் வழியே திருட்டுத்தனமாக தப்பி வரும் சசிகுமாரின் குடும்பம், தாங்கள் சிங்களர்கள் என்பதை மறைத்து, சென்னையில் வசித்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் குண்டுவெடிப்பு வழக்கில் சசிகுமார் குடும்பத்தை போலீஸ் வலைவீசி தேடுகிறது. அவர்கள் சசிகுமார் குடும்பத்தை கண்டுபிடித்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை. வன்முறை இல்லாமல் ஒரு தரமான ஃபீல் குட் படமாக இதை இயக்கி இருந்தார் அபிஷன் ஜீவிந்த். இப்படத்தின் எமோஷனல் காட்சிகள் நம்மை கலங்க வைத்தது. அதுமட்டுமின்றி கதை டல் அடிக்காமல் இருக்க ஆங்காங்கே இடம்பெறும் காமெடி காட்சிகளும் 100 சதவீதம் சிரிப்புக்கு கியாரண்டி கொடுக்கும் விதமாக இருந்தன.
பட்ஜெட்டை விட 1200 சதவீதம் அதிக லாபம் பார்த்த டூரிஸ்ட் ஃபேமிலி
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெறும் 7 கோடி பட்ஜெட்டில் தான் தயாரிக்கப்பட்டது. ஆனால் இப்படம் உலகளவில் ரூ.90 கோடி வசூலித்து இந்த ஆண்டு இந்திய அளவில் அதிகம் லாபம் பார்த்த படம் என்கிற சாதனையை படைத்துள்ளது. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் அதன் பட்ஜெட்டை விட 1200 சதவீதம் அதிகம் லாபம் பார்த்துள்ளது. இந்தியாவிலேயே இம்புட்டு சதவீதம் லாபம் வேறு எந்த படத்துக்கும் கிடைக்கவில்லை. குறிப்பாக இந்த வருடத்தின் அதிக வசூல் ஈட்டிய படமாக இருக்கும் சாவா கூட படத்தின் பட்ஜெட்டைவிட 800 சதவீதம் தான் அதிகம் லாபம் பார்த்திருந்தது. ஆனால் டூரிஸ்ட் ஃபேமிலி படம் 1200 சதவீதம் அதிக லாபம் ஈட்டி முதலிடத்தில் உள்ளது. இனி எஞ்சியுள்ள ஐந்து மாதங்களிலும் இந்த சாதனை முறியடிக்கப்பட வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.