தல தளபதிக்கே தண்ணிகாட்டிய விஜய் சேதுபதி; நெட்பிளிக்ஸில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 தமிழ் படங்கள் இதோ

Published : Jul 19, 2025, 12:52 PM IST

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் விஜய், அஜித் படங்களை முந்தி உள்ளார் விஜய் சேதுபதி.

PREV
15
Top 10 Most Watched Tamil Movies on Netflix

ஓடிடி தளங்களின் வளர்ச்சி சினிமாவுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் அமைந்துள்ளது. முன்பெல்லாம் ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனால் 50 நாட்கள் வரை அசால்டாக ஓடும். ஆனால் ஓடிடி வருகையால் ஒரு படம் இரண்டு வாரங்கள் தாக்குப்பிடிப்பதே அரிதான ஒன்றாக உள்ளது. ஏனெனில் தற்போது தியேட்டரில் ரிலீஸ் ஆன 1 மாதத்தில் புதுப்படங்கள் ஓடிடிக்கு வந்துவிடுகின்றன. இதனால் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்போர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதே நேரம் ஓடிடி உரிமை தற்போது பெரும் தொகைக்கு விற்பனை ஆவதால், தயாரிப்பாளர்களும் அதன் மூலம் நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

25
நெட்பிளிக்ஸில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 10 படங்கள்

அதன்படி இந்த பட்டியலில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 10வது இடத்தில் உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் நெட்பிளிக்ஸில் 78 லட்சம் வியூஸ் அள்ளி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக பிரதீப் ரங்கநாதன் நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான டிராகன் 9-ம் இடத்தில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆன இப்படம் 87 லட்சம் பார்வைகளுடன் 9ம் இடத்தை பிடித்துள்ளது. ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் வெளியாகி தியேட்டரில் படுதோல்வியை சந்தித்த இந்தியன் 2 திரைப்படம், நெட்பிளிக்ஸில் 93 லட்சம் வியூஸ் உடன் 8-ம் இடத்தில் உள்ளது.

35
கோட் படத்துக்கு ஐந்தாம் இடம்

பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த ஆண்டு திரைக்கு வந்து வெற்றிபெற்ற மெய்யழகன் திரைப்படத்திற்கு நெட்பிளிக்ஸிலும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் 1 கோடி பார்வைகளுடன் 7ம் இடத்தில் உள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் 1.18 கோடி வியூஸ் உடன் 6-ம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்தப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் தளபதி விஜய்யின் கோட் படம் உள்ளது. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் நெட்பிளிக்ஸில் இதுவரை 1.22 கோடி பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

45
முதலிடத்தில் மகாராஜா

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸில் 1.36 கோடி வியூஸ் அள்ளி இருக்கிறது. அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை அஜித் நடித்த துணிவு படம் பிடித்துள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸில் 1.64 கோடி பார்வைகளை பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தில் தளபதி விஜய்யின் லியோ படம் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் நெட்பிளிக்ஸில் 2.21 கோடி வியூஸ் அள்ளி உள்ளது. இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள படம் மகாராஜா. நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த இப்படம் 2.71 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.

55
டாப் 5 இந்திய படங்கள்

அதேபோல் இந்தியளவில் நெட்பிளிக்ஸில் அதிக பார்வைகளை பெற்ற படங்களின் பட்டியலில் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. இப்படம் நெட்பிளிக்ஸில் 4.36 கோடி வியூஸ் அள்ளி உள்ளது. Chor Nikal Ke Bhaga என்கிற இந்திப் படம் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதற்கு 3.32 கோடி வியூஸ் கிடைத்துள்ளது. ஜவான் படம் மூன்றாம் இடத்தையும், கங்குபாய் கத்தியவாடி 4-ம் இடத்தையும், லாபட்டா லேடீஸ் திரைப்படம் 5-ம் இடத்தையும் பெற்றுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories