தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருபவர் ஃபஹத் ஃபாசில். அவர் நடிப்பில் தற்போத சமூக ஊடகங்களில் ஃபஹத் ஃபாசில் பயன்படுத்திய சிறிய போன் தான் மிகவும் ஹைலைட்டாக பேசப்படுகிறது. கையில் அடங்கும் எளிய கீபேட் போன் என்றுதான் முதலில் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அது ஆடம்பர பிராண்டான Vertu போன் என்று தெரிந்ததும், அதன் விலை மற்றும் மாடலை நெட்டிசன்கள் வலைவீசி தேடிகண்டுபிடித்துள்ளனர். பார்க்க சின்னதாக இருந்தாலும், அதன் விலையும், அதில் உள்ள அதிநவீன அம்சங்களும் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.
24
Vertu போனில் என்ன ஸ்பெஷல்?
யுகே-வை தலைமையிடமாகக் கொண்ட போன் தயாரிப்பாளர்கள் தான் Vertu. 1998-ல் தொடங்கப்பட்ட Vertu, நோக்கியா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. இங்கிலாந்தில் உள்ள ஹாம்ப்ஷையரில் இருந்த தொழிற்சாலையில் தான் Vertu போன்கள் தயாரிக்கப்பட்டன. தொடக்கத்தில், போனின் செயல்பாட்டை விட கைவினைத்திறன், ஸ்டைல், சேவை ஆகியவற்றில் கவனம் செலுத்தி விற்பனை செய்தனர். இப்போதும் அதுதான் Vertuவின் சிறப்பு. நியூயார்க், துபாய், மாஸ்கோ, ஃப்ராங்க்ஃபர்ட், ஹாங்காங், பாரிஸ், சிங்கப்பூர் என பல இடங்களில் Vertu கிளைகள் உள்ளன.
34
திவாலான Vertu
2012ம் ஆண்டு அக்டோபரில், நோக்கியா நிறுவனம் Vertuவை இக்விட்டி VI என்ற தனியார் நிறுவனத்திற்கு விற்றது. ஆனால் 10% பங்குகளை தக்க வைத்துக் கொண்டது. 2013ம் ஆண்டு இறுதியில், Vertuவுக்கு 3,50,000 வாடிக்கையாளர்கள் இருந்தனர். 2015-ல், இக்விட்டி நிறுவனம் Vertuவை ஹாங்காங்கைச் சேர்ந்த கோடின் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு விற்றது. 2017 மார்ச்சில், கோடின் ஹோல்டிங்ஸ் நிறுவனம் Vertuவை சைப்ரஸைச் சேர்ந்த துருக்கிய நிறுவனமான பாஃபர்டன் லிமிடெட் நிறுவனத்திற்கு விற்றது. 2017-ல் நிறுவனம் திவாலானது. புதிய உரிமையாளர்கள் திவால்நிலை பாதுகாப்பிற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஃபஹத் ஃபாசில் பயன்படுத்தும் Vertu போனின் விலை என்ன?
திவாலாவதற்கு முன்பு வெளியிடப்பட்ட கடைசி Vertu போன் Vertu கான்ஸ்டலேஷன் (2017). 2018-ல், Vertu திவால் நிலையில் இருந்து மீண்டு, அக்டோபரில் பெய்ஜிங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஆஸ்டர் பி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. 2022 அக்டோபரில் டூயல் ஏஐ மாடல்களை வெளியிட்டது. வெப் 3.0 தொழில்நுட்பம், பில்ட்-இன் இமேஜ் டூ என்எஃப்டி கன்வெர்ட்டர் கொண்ட "உலகின் முதல் வெப்3 போன்" என்று Vertu கூறியது. தற்போது நடிகர் ஃபஹத் ஃபாசிலிடம் இருப்பது Vertu அசென்ட் சீரிஸ் போன் என்று தெரியவந்துள்ளது. Vertu அசென்ட் சீரிஸ் போன்கள் விலை இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. பட்டன் போனையே 10 லட்சம் கொடுத்து வாங்கி உள்ளாரா ஃபஹத் ஃபாசில் என சிலர் கிண்டலடித்து வருகிறார்கள்.
நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் தற்போது மாரீசன் என்கிற தமிழ் படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் வடிவேலு உடன் இணைந்து நடித்துள்ளார் ஃபஹத். இப்படம் வருகிற ஜூலை 25ந் தேதி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.