பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன ராஜு ஜெயமோகன், ஹீரோவாக அறிமுகமாகி உள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
விஜய் டிவியில் கனா காணும் காலங்கள், ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்தவர் ராஜு. இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு டைட்டில் வின்னராகவும் தேர்வானார். பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த பின்னர் ராஜுவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு குவிந்தது. அதன்படி நட்புனா என்னன்னு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ், டான் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த ராஜு, பன் பட்டர் ஜாம் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார்.
24
ராஜுவின் பன் பட்டர் ஜாம்
பன் பட்டர் ஜாம் திரைப்படத்தை ராகவ் மிதார்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இதில் ராஜுவுக்கு ஜோடியாக ஆதியா பிரசாத் மற்றும் பவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். சுரேஷ் சுப்ரமணியம் தயாரித்துள்ள இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி, தங்கதுரை என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பாபு குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜான் ஆபிரஹாம் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா பணியாற்றி உள்ளார். அவர் இசையில் பாடல்கள் ரிலீஸுக்கு முன்பே வரவேற்பை பெற்றன.
34
வரவேற்பை பெறும் பன் பட்டர் ஜாம்
பன் பட்டர் ஜாம் திரைப்படம் ஜூலை 18ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இதற்கு போட்டியாக 11 படங்கள் ரிலீஸ் ஆனாலும் இப்படத்திற்கு தான் அதிகப்படியான திரையரங்குகள் கிடைத்தன. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களை கவரும் வகையில் உள்ளதால் இளசுகள் மத்தியில் பன் பட்டர் ஜாம் திரைப்படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் உள்ளது. அதேபோல் விமர்சன ரீதியாகவும் பன் பட்டர் ஜாம் திரைப்படத்திற்கு பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருவதால் படக்குழுவும் செம சந்தோஷத்தில் உள்ளது.
இந்நிலையில், பன் பட்டர் ஜாம் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் பெரியளவில் சோபிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படம் நேற்று மட்டும் இந்திய அளவில் ரூ.25 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்துக்கு பாசிடிவ் விமர்சனங்கள் உள்ளதால் போகப் போக பிக் அப் ஆக வாய்ப்பு உள்ளது. மேலும் நேற்று ரிலீஸ் ஆன படங்களில் அதிக வசூல் அள்ளிய படம் என்றால் அது பன் பட்டர் ஜாம் திரைப்படம் தான். இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.