ஒவ்வொரு சீனும் மிரட்டல்; நடுநடுங்க வைக்கும் டாப் 11 சைக்கோ திரில்லர் படங்கள் - இந்த வாரம் OTTயில் பார்க்கலாம்!

First Published | Oct 8, 2024, 11:49 PM IST

Top 11 Tamil Thriller Movies in OTT : திரையரங்குகளில் நீங்கள் மிஸ் செய்திருந்தாலும் கண்டிப்பாக OTT பார்க்கவேண்டிய டாப் 11 திரில்லர் படங்களின் லிஸ்ட் இதோ

Thriller movies

திரில்லர் மற்றும் சைக்கோ திரில்லர் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே மிகப்பெரிய அளவில் வரவேற்பு உண்டு. தமிழ் ரசிகர்களும் அவ்வித படங்களை பெரிய அளவில் ரசித்துள்ளனர். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் வெளியாகி இப்போது OTT தளத்தில் உள்ள மிகச்சிறந்த திரில்லர் மற்றும் சைக்கோ திரில்லர் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

இதில் கடந்த 2022ம் ஆண்டு பிரபல இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹாட்டான திரைப்படம் தான் "சாணி காகிதம்". இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், மற்றும் பிரபல இயக்குனர் செல்வராகவன் உள்ளிட்டவர்கள் நடித்து அசத்தியிருப்பார்கள். ஒவ்வொரு நொடியும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்கின்ற சுவாரசியத்துடன் இந்த திரைப்படம் நகரும். இப்போது அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் இந்த திரைப்படத்தை நம்மால் பார்க்கமுடியும்.

Ravinder Chandrasekar:15 ஆண்டுகளுக்கு பிறகு ஓடியதால் வந்த பிரச்சனை – நடக்க முடியாமல் அவதிபட காரணமே இது தானாம்!

Maanaadu Movie

கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன், எஸ்.ஜே சூர்யா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் "மாநாடு". சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இந்த திரைப்படம் மிகச்சிறந்த திரில்லர் படமாக மட்டுமல்லாமல் ஒரு விதமான சயின்ஸ் பிக்சன் திரைப்படமாகவும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் இப்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் உள்ளது.

Tap to resize

Ponmagal Vanthal

கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஜெ.ஜெ பிரெட்ரிக் இயக்கத்தில் நடிகை ஜோதிகா, பார்த்திபன் மற்றும் பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நான் "பொன்மகள் வந்தால்". திரில்லர் மற்றும் ஆக்சன் கலந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக இந்த திரைப்படம் பெரிய அளவில் ஜெயிக்கவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. தற்பொழுது அமேசான் ப்ரைம் OTT தளத்தில் இந்த திரைப்படம் மக்களின் பார்வைக்கு உள்ளது.

Kaithi Movie

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கைதி, நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜின் சினிமாடிக் யுனிவர்ஸ் இந்த திரைப்படத்தில் இருந்து தான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்சன் மற்றும் திரில்லர் காட்சிகளுடன் மிக நேர்த்தியாக இந்த திரைப்படத்தை உருவாக்கி இருப்பார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்பொழுது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் இந்த திரைப்படம் உள்ளது.

vada Chennai

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், சமுத்திரக்கனி மற்றும் ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து வெளியாகி மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் தான் "வடசென்னை". எப்போது இந்த திரைப்படத்தில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று பலரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர். வெற்றிமாறனின் மிகச்சிறந்த படைப்புகளில் இந்த திரைப்படம் ஒன்று. தற்பொழுது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த திரைப்படம் உள்ளது.

Thadam

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய், தான்யா ஹோப், சுருதி வெங்கட் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் "தடம்". உண்மையில் ஆக்சன் மற்றும் திரில்லர் கலந்த திரைப்படமாக வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை இந்த திரைப்படம் பெற்றது. இந்த திரைப்படமும் இப்போது அமேசான் ப்ரைம் தளத்தில் நம்மால் பார்க்க முடியும்.

Ratchasan

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் "ராட்சசன்". இன்றளவும் இந்த திரைப்படம் மிகச்சிறந்த சைகோ திரில்லர் திரைப்படங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கவும் ராம்குமார் முடிவு செய்து இருப்பதாக அண்மையில் சில தகவல்கள் வெளியானது. மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற ராட்சசன் திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் உள்ளது.

Kolamavu Kokila

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "கோலமாவு கோகிலா". பிரபல நடிகை நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். உண்மையில் காமெடியாக இருக்கும் அதே நேரம் பெரிய அளவில் திரில்லிங்காகவும் இந்த திரைப்படம் பயணிக்கும். தற்பொழுது அமேசான் ப்ரைம் தளத்தில் இந்த திரைப்படம் இருக்கின்றது.

Imaikka Nodikal

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா முரளி மற்றும் பாலிவுட் இயக்குனர் அனுராக் ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் தான் "இமைக்கா நொடிகள்". நயன்தாராவின் திரை வாழ்க்கையிலே மிகச் சிறந்த திரில்லர் திரைப்படமாக அமைந்த ஒரு படம் இது என்றால் அது மிகையல்ல. இந்த திரைப்படமும் இப்போது அமேசான் ப்ரைம் தளத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Maanagaram

கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் திரை உலகில் இயக்குனராக களம் இறங்கிய திரைப்படம் தான் "மாநகரம்". நடிகை ரெஜினா, நடிகர்கள் ஸ்ரீ மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு இயக்குனராக மிகச்சிறந்த திரில்லர் திரைப்படத்தை இயக்கி மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருந்தார் லோகேஷ் கனகராஜ். தற்போது இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் உள்ளது.

Visaranai

கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பலரையும் கதிகலங்க செய்த திரைப்படம் தான் "விசாரணை". உண்மையில் இந்த திரைப்படத்திற்கு பிறகு போலீசார் மீது பலருக்கும் ஒரு விதமான பயம் ஏற்பட்டது என்றால் அது யாராலும் மறுக்க முடியாத உண்மை. மிகச்சிறந்த திரில்லர் மற்றும் ஆக்சன் கிரைம் திரைப்படமாக இந்த திரைப்படம் விளங்கியது. தற்போது பிரபல Netflix தலத்தில் இந்த திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது.

தனுஷை மிஞ்சிய வனிதாவின் மகள் ஜோவிகா; எந்த விஷயத்தில் தெரியுமா? தெரிஞ்சா கண்டிப்பா வாழ்த்து சொல்லுவீங்க!

Latest Videos

click me!