ஆம் இந்த படத்தின் போஸ்டரை பார்த்த அனைவருக்கும் புரிந்திருக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தை தயாரிக்க போவது ஜோதிகா விஜயகுமார் தான் என்று. ஏற்கனவே நடிகர் பார்த்திபன் நடிப்பில் மற்றும் இயக்கத்தில் அண்மையில் வெளியான டீன்ஸ் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக ஜோவிகா பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தயாரிப்பு சம்பந்தமான விஷயங்களை கற்றுக்கொள்ள தற்பொழுது தனது தாய் இயக்கும் இந்த திரைப்படத்தில் தயாரிப்பாளராக களம் இறங்கி இருக்கிறார் 21 வயது நிரம்பிய ஜோவிகா விஜயகுமார்.
ஏற்கனவே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். இந்த சூழலில் தற்பொழுது திரைத்துறையில் அதிக அளவில் அவர் கவனம் செலுத்தி வருகின்றார். பிரபல நடிகர் தனுஷ் தனது 27வது வயதில் தான் தனது மனைவியோடு இணைந்து Wunderbar என்கின்ற நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களை தயாரிக்க தொடங்கினார். ஆனால் அவரை ஒப்பிடும்போது சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தனது 21 வது வயதிலேயே ஜோவிகா தயாரிப்பாளராக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
நக்கல் மன்னன்னா சும்மாவா? 20 வருட கடும் போராட்டம் - 50 கோடி ரூபாய் நிலத்தை மீட்ட கவுண்டமணி!