அதனை தொடர்ந்து 1980களின் துவக்கத்திலிருந்து கவுண்டமணியின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் அதிகரிக்க தொடங்கியது. 10 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார் கவுண்டமணி. குறிப்பாக 1990களின் இறுதிவரை, தமிழில் ஒரு வருடத்தில் 30 திரைப்படங்கள் வெளியாகிறது என்றால், அதில் குறைந்தது 25 திரைப்படத்திலாவது கவுண்டமணி நிச்சயம் நடித்திருப்பார். மீதமுள்ள அந்த ஐந்து படங்களும் கூட கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்காததால் அவர் இல்லாமல் வெளியாகியிருக்கும் என்று கூறினாலும் அது மிகையல்ல.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் என்று யார் படமாக இருந்தாலும் இயக்குனர்கள் முதலில் ஹீரோக்களின் டேட்டுகளை வாங்குவதற்கு முன்னதாக, அதில் நடிக்கவிருக்கும் கவுண்டமணியின் கால்ஷீட் தான் முதலில் வாங்குவார்களாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட முதலில் என்னுடைய கால்ஷீட் இருக்கட்டும், முதலில் கவுண்டமணியின் கால் சீட்டை வாங்கிவிட்டு வாருங்கள் என்று நான் சொல்லுவாராம். அந்த அளவிற்கு பிஸியாக நடித்து வந்தவர் கவுண்டமணி.