குறிப்பாக தற்போது வழங்கப்பட்டு வரும், 70வது தேசிய திரைப்பட விருதுகளில்... பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டும், சுமார் 4 தேசிய விருதுகளை பெற்றது.அதன்படி சிறந்த இசைக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு தேசிய விருது வழங்க பட்டது. இதை தொடர்ந்து சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை பொன்னியின் செல்வன் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தட்டிச் சென்றார். இதுதவிர சிறந்த ஒலியமைப்புக்கான விருதும் பொன்னியின் செல்வன் பாகம் 1-ல் பணியாற்றிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே போல் சிறந்த தமிழ் படத்திற்கான விருதையும், பொன்னியின் செல்வன் முதல் பாகம் தான் வென்றுள்ளது. இதற்கான விருதுகளை, இயக்குனர் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட 4 பிரபலங்களும் பெற்றுக்கொண்டனர்.
தன்னை விட 20 வயது மூத்த ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்ய போகும் விக்ரம் மகள்!!