Nithya Menen : மகுடம் சூடிய நிதியா மேனன் - முதல் முறையாக சிறந்த நடிகைக்கு கிடைத்த தேசிய விருது!

First Published | Oct 8, 2024, 7:12 PM IST

70th National Film Awards, Nithya Menen: நடிகை நித்யா மேனன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை டெல்லியில் நடைபெற்ற 70வது தேசிய திரைப்பட விருது விழாவில் பெற்றுள்ளார். திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

Nithya Menen - 70th National Film Awards

ஆண்டுதோறும் திரைப்படத் துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், சிறந்த திரைப்படம் என்று பலவற்றில் சிறந்து விளங்கியவர்களுக்கு மத்திய அரசு தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான 70ஆவது தேசிய திரைப்பட விருது கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் திரைக்கு வந்த திருச்சிற்றம்பலம் படத்திற்கு 2 விருதுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி சிறந்த நடிகைக்கான தேசிய விருது நித்யா மேனனுக்கு அறிவிக்கப்பட்டது. அதே போன்று, சிறந்த நடன இயக்குனருக்கான விருதை இப்படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்குதா பெண்ணே பெண்ணே' பாடலுக்கு நடனம் அமைத்துக் கொடுத்த ஜானி மாஸ்டர் மற்றும் சதீஷ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

70th National Film Awards

இந்த நிலையில் தான் தற்போது டெல்லியில் 70ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அனைவருக்கும் விருது வழங்கி கௌரவித்து வருகிறார். இந்த விழாவில் திருச்சிற்றம்பலம் நடிகை நித்யா மேனன் அழகான புடவையில் சென்று குடியரசுத் தலைவர் கையால் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

Latest Videos


Nithya Menen, Thiruchitrambalam, Dhanush, 70th National Film Awards

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நித்யா மேனனுக்கு தமிழ் சினிமா மட்டுமே தேசிய விருதை பெற்று கொடுத்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், பாரதிராஜா, நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், முனிஷ்காந்த், அறந்தாங்கி நிஷா ஆகியோர் பலரது நடிப்பில் திரைக்கு வந்து நல்ல விமர்சனம் பெற்றது.

President Droupadi Murmu, 70th National Film Awards, Dhanush

இந்தப் படத்தில் தனது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நித்யா மேனன் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார். தற்போது தமிழ் சினிமாவில் காதலிக்க நேரமில்லை, Dear Exes, இட்லி கடை உள்பட மொத்தமாக 4 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய நித்யா மேனன், இந்த தருணத்தை தன்னால் மறக்க முடியாது. இது கொண்டாடப்பட வேண்டிய நேரம். அனுபவிக்க வேண்டிய தருணம். எப்போதும் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நடிகருடன் நடிக்கவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். இதே போன்று கன்னட நடிகரான ரிஷப் ஷெட்டி தனது காந்தாரா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

click me!