விஜய் டிவியில் அக்டோபர் 6-ஆம் தேதி, ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ் சீசன் 8. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில், ரவீந்தர் சந்திரசேகர் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். இவரை தொடர்ந்து, சாச்சனா, தீபக், ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், முத்துக்குமரன், ஜெஃப்ரி, அர்னவ், அக்ஷிதா, தர்ஷா குப்தா, அருண் பிரசாத், ஜாக்குலின், தர்ஷிகா, பவித்ரா ஜனனி உள்ளிட்ட மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.
யாரும் எதிர்பாராத விதமாக, நிகழ்ச்சி துவங்கிய 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என பிக்பாஸ் அறிவித்ததை தொடர்ந்து, இதற்கான எவிக்சன் நேற்று நடந்தது. இதில் பலரும் சாச்சனா கூறிய ஒற்றை வார்த்தையை குறிப்பிட்டு கூறி... அதிக ஓட்டுகள் அடிப்படையில் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், நிகழ்ச்சி மீதான ஆர்வத்தையும் தூண்டியது.