ஒரு காலக்கட்டத்தில், அதாவது தளபதி விஜய்.. இளைய தளபதியாக, காதல் மன்னனாக வலம்வந்த காலத்தில் அவருடைய பல படங்களுக்கு பாடல் வரிகளை எழுதி அசத்தியவர் தான் வைரமுத்து. அதிலும் குறிப்பாக கடந்த 2001ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான ஷாஜகான் திரைப்படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் எழுதியது வைரமுத்து. 23 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது தளபதி விஜய் டாப் ஹீரோவாக உருவாகிக்கொண்டிருந்த காலத்திலேயே அவர் துணிந்து நடித்த படம் அது. ஏன் என்றால்... ஷாஜகான் படத்தில் விஜய்க்கு ஜோடி கிடையாது. தான் நேசிக்கும் பெண், தன்னுடைய நண்பனை நேசித்தால் இறுதியில் அவர்களது காதலை சேர்த்துவைத்துவிட்டு சிங்கிளாக செல்வர் விஜய்.
ஒரு காதல் மற்றும் ஆக்ஷன் ஹீரோவாக உருவாகி வரும் நடிகர்கள் ஏற்க தயங்கும் கதை தான் என்றாலும் கூட, தளபதி விஜய் அந்த படத்தை துணிந்து ஏற்று நடித்து அதில் சாதித்தும் காட்டினார். ஷாஜகான் படத்தில் விஜய்க்கு ஜோடி இல்லையே தவிர அந்த படத்தில் அவருக்கு நிறைய பாடல்கள் உண்டு. அந்த வகையில் ஷாஜகான் படத்தில் வந்த "அச்சச்சோ புண்ணை", "காதல் ஒரு தனி கட்சி", "மே மாத மேகம்", "மெல்லினமே மெல்லினமே" மற்றும் "மின்னலை பிடித்து" என்று எல்லா பாடல்களுமே செம ஹிட்டான பாடல்கள்.