தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும், ஏ.எல்.விஜய் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான 'தெய்வத்திருமகள்' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி சாரா. இந்த படத்தில் விக்ரமின் நடிப்பு எந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டதோ... அதே அளவிற்கு, பேபி சாராவின் நடிப்பும் ரசிக்கப்பட்டது. தமிழ் மொழி தெரியாது என்றாலும், 3 வயதிலேயே தன்னுடைய நடிப்பை தத்ரூபமாக வெளிப்படுத்தி இருந்தார் பேபி சாரா.
25
Sara Arjun
முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான 'சைவம்' படத்தில் நடித்த சாரா, சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த நந்தினி கதாபாத்திரத்தின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாராவுக்கு 18 வயதுக்கு மேல் ஆகி விட்டதால்... இவருக்கு அடுத்தடுத்து ஹீரோயின் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே, மறைந்த இயக்குனர் ஜீவாவின் மகள் சனா மரியம் இயக்கும், திரைப்படத்தில் சாரா அர்ஜுன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. இதை தொடர்ந்து, தமிழில் கொட்டேஷன் கேங் என்கிற படத்திலும் சாரா நடித்துள்ளார். இந்த படத்தில் சாரா வலுவான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது.
45
Sara Arjun Pair With Ranveer Singh
இதை தெடர்ந்து பாலிவுட் திரையுலகிலும்... பிரபல டாப் ஹீரோவுக்கு ஜோடியாக அறிமுகமாக உள்ளார் சாரா அர்ஜுன். இந்த படம் குறித்த அறிவிப்பு தான் தற்போது வெளியாகி உள்ளது. சாரா அர்ஜுன், இயக்குனர் ஆதித்ய தார் இயக்கத்தில் உருவாக உள்ள பிரமாண்ட திரைப்படம் ஒன்றியில் நடிக்க கமிட் ஆகி உள்ளாராம். இந்த படத்தில், டைட்டில் எதுவும் வைக்கப்படாத இந்த படத்தில் ரன்வீர் கபூர் ஹீரோவாக நடிக உள்ளார். மேலும் தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி சாரா ரன்வீருக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
ரன்வீர் சிங்குக்கு தற்போது 39-வயதாகும் நிலையில் தன்னை விட சுமார் 20 வயது குறைவான சாரா அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதற்கு சிலர் தங்களின் விமர்சனங்களை தெரிவித்து வந்தாலு, ஒரு சில சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் ஹீரோயினாக மீனா அறிமுகமானபோது... ரஜினிகாந்த் 20 வயதை விட அதிக வயசு வித்தியாசம் இருந்ததாக கூறி வருகிறார்கள். எனவே நடிப்புக்கு வயது ஒரு தடை இல்லை என தெரிவித்து வருகிறார்கள்.