Actor Rajinikanth Vettaiyan Movie
வேட்டையன் படம் 10 ஆம் தேதி ரிலீசாகும் நிலையில், அமிதாப் பச்சன் படப்பிடிப்பிற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு வருவதாகவும், ரஜினிகாந்த் ஒரு யதார்த்தமான நடிகர் என்றும் இயக்குநர் டிஜே ஞானவேல் கூறியுள்ளார். அண்மையில் பட புரோமோஷனில் கலந்து கொண்ட டி ஜே ஞானவேல், அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் வேட்டயனுக்காக எப்படி செயல்பட்டார்கள் என்பது குறித்து தெள்ளத் தெளிவாக விளக்கி கூறியிருக்கிறார்.
அப்படி என்ன சொல்லியிருக்காருன்னு நீங்களே பாருங்கள்…பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஷூட்டிங்கிற்கு வரும் ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் என்றும், ரஜினிகாந்த் கடைசி பெஞ்ச் ஸ்டூடண்ட் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இருவரும் 33 ஆண்டுகளுக்கு பிறகு வேட்டயன் படத்தின் நடித்துள்ளனர். இதற்கு முன்னதாக ஹிந்தியில் வெளியான ஹம் என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
Rajinikanth, Amitabh Bachchan, Fahadh Faasil, Vettaiyan
மேலும் டி ஜே ஞானவேல் கூறியிருப்பதாவது: பச்சன் சார் ஃபர்ஸ்ட் நாளே நம்மை டென்ஷனாக்கிவிடுவார். அவர் என்னை கூப்பிட்டு, உட்கார வைத்து அடுத்த நாளுக்கான சீன் என்ன என்று படிப்பார். மேலும், அது குறித்து கேள்விகளையும் கேட்பார். அடுத்த நாள் ஷூட்டிங்கிற்காக என்ன செய்ய வேண்டும் என்று எங்கிட்ட கேள்வி மேல கேள்வி கேட்பார்.
ஆனால், ஷூட்டிங் நாளன்று ரஜினிகாந்த் சாரிடம் சீன் பேப்பரை கொடுத்தால், ஷாட்டின் போது பார்த்துக் கொள்ளலாம் என்று சர்வ சாதாரணமாக சொல்லிடுவாரு. அமிதாப் பச்சன் எப்போதும் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு ரெடியாகவே வர்றாரு. இல்லையென்றால், அவரை சமாதானப்படுத்துவது ரொம்பவே கஷ்டம். அப்படியிருக்கும் போது நீங்களும் அவருக்கு ஏற்ப ரெடியா வரணும் சார். அப்படியில்லனா அவரு கோபப்படுவாரு சார் என்றே ரஜினி சாரிடம் சொன்னேன்.
Vettaiyan Movie, Rajinikanth, Manju Warrier
ஒருநாள் நான் அமிதாப் பச்சன் சார் மேனேஜரிடன் சென்று என்னை ஏன் இப்படி சித்திரவதை செய்றீங்க என்று கேட்டேன். ஆனால், அதற்கு அவர் கூலாக நாளை நடக்கு சீனுக்கு தயாராக இருக்க நீங்கள் உதவி செய்ய வேண்டு. ஒவ்வொரு இயக்குநர்களும் இதைத் தான் செய்வார்கள் என்றார். ஆனால், இயக்குநர்களாகிய நாங்கள் நாள்தோறும் எடுக்கப்படும் சீனுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம். அடுத்தநாள் எடுக்கப்படும் சீன் பற்றி யோசிப்பது எல்லாம் கஷ்டம் தான் என்றார்.
தொடர்ந்து பேசிய ஞானவேல், முதல் நாள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்தநாளுக்கு வரும் அமிதாப் சார், எல்லா சீன் டயலாக்கையும் கச்சிதமாக வச்சிருப்பார். அவரிடம் எந்த டயலாக் கேட்டாலும் சரியாக சொல்லிடுவார் என்றார். அந்தளவிற்கு பெர்பெக்டா இருப்பார். எப்போதுமே நல்லா படிக்கும் மாணவர்களுடன் டிராவல் பண்ணுவது ரொம்பவே கஷ்டம். அமிதா சார் ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட்.
Vettaiyan, Rajinikanth
எப்போதும் அமிதாப் பச்சனை காத்திருக்க வைத்திருக்காமல் அவர் தொடர்பான சீன்களை முதலில் முடித்துவிட வேண்டும் என்று ரஜினி சார் என்னிடம் கூறினார். ஒருநாள் அமிதாப் பச்சனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஒருநாள் கன மழை பெய்ததால் அமிதாப் பச்சனுக்குப் பதிலாக ரஜினி சார் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது என்றார்.
முழுக்க முழுக்க போலீஸ் கதையை மையப்படுத்திய வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் காவல் கண்காணிப்பாளராக நடித்துள்ளார். அவருக்கு பக்கபலமாக ராவ் ரமேஷ் டிஜிபி, ரித்திகா சிங் ஏஎஸ்பி, கிஷோர் எஸ்பியாக நடித்துள்ளனர். மேலும், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, அமிதாப் பச்சன், அபிராமி, சுப்ரீத் ரெட்டி, ரோகிணி, துஷாரா விஜயன், பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரூ.160 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.