நடிகர் ஆர்கே சுரேஷ் நடிப்பில், 2018-ஆம் ஆண்டு வெளியான பில்லா பாண்டி திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கே சி பிரபாத். இந்த படத்தில் முரட்டு வில்லனாகவும் நடித்திருந்தார். இவர் நடித்த வில்லன் ரோலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, அங்காரன், போன்ற பல படங்களில் முக்கிய வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.