இந்த படங்கள் & வெப் சீரிஸை தான் OTTயில் அதிகம் பார்த்துள்ளார்களாம் - டாப் 10 லிஸ்ட் இதோ

First Published | Oct 8, 2024, 2:16 PM IST

அக்டோபர் முதல் வாரத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜியோ சினிமா ஆகிய ஓடிடி தளங்களில் வெளிவந்த டாப் 10 படங்கள் மற்றும் வெப் தொடர்கள் பற்றி பார்க்கலாம்.

Most Watched Movies and Web Series on OTT

ஓடிடி தளங்கள் கடந்த 4 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டுள்ளன. அதனால் வாரந்தோறும் ஓடிடியில் படங்களும், வெப் தொடர்களும் அதிகளவில் வெளிவருகின்றன. அந்த வகையில் செப்டம்பர் 30-ந் தேதி முதல் அக்டோபர் 6ந் தேதி வரை ஓடிடியில் அதிக பார்வைகளை பெற்ற வெப் தொடர்கள் மற்றும் படங்களின் டாப் 10 பட்டியலை ஓர்மேக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த படங்களும், வெப் தொடர்களும் இடம்பிடித்துள்ளது என்பதை பார்க்கலாம்.

Thalaivettiyaan paalayam

10. அமேசான் பிரைம் வீடியோவில் கடந்த மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் தமிழ் வெப் தொடர் தான் தலைவெட்டியான் பாளையம். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த வெப் தொடர் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர் பட்டியலில் 10ம் இடத்தில் உள்ளது. இந்த வெப் தொடரை 16 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

Tap to resize

penguin

9. கோலின் ஃபேர்வெல் நடித்துள்ள தி பென்குயின் என்கிற ஆங்கில வெப் தொடர் தற்போது ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்டிரீம் ஆகி வருகிறது. இந்த வெப் தொடர் 17 லட்சம் பார்வைகளுடன் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர் பட்டியலில் 9ம் இடம் பிடித்துள்ளது.

Honeymoon

8. ஜியோ சினிமாவில் ஸ்ட்ரீம் ஆகி வரும் ஆஷா நெகியின் ஹனிமூன் என்கிற வெப் தொடர் தான் அதிகம் பார்க்கப்பட்ட வெப் தொடர்களின் பட்டியலில் 8ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த வெப் தொடர் 17 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

Love Sitara

7. சோபிதா துலிபாலா நடிப்பில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆன படம் தான் லவ் சிதாரா. வந்தனா கட்டாரியா இயக்கி உள்ள இந்த படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதோடு 18 லட்சம் பார்வைகளோடு 7-ம் இடத்தை பிடித்துள்ளது.

Sector 36

6. விக்ராந்த் மேஸி நடித்துள்ள கிரைம் த்ரில்லர் திரைப்படமான Sector 36 நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் கடந்த வாரம் நான்காவது இடத்தில் இருந்த இந்த படம் இந்த வாரம் 6-வது இடத்துக்கு வந்துள்ளது. இதை 22 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... ஆயுத பூஜை ஸ்பெஷல்... விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 3 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்!

School Friends Season 2

5. School Friends வெப் தொடரின் இரண்டாவது சீசன் அமேசான் எம்.எக்ஸ் பிளேயரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வரும் இந்த வெப் தொடர் கடந்த வாரம் 6-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் 25 லட்சம் பார்வைகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

CTRL Movie

4. விக்ரமாதித்யா இயக்கத்தில் இந்தியில் வெளியான படம் தான் CTRL. திரில்லர் திரைப்படமான இது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகின்றது. இந்தப் படம் 26 லட்சம் பார்வைகளுடன் 4ம் இடம் பிடித்து இருக்கிறது.

The Great Indian Kapil Sharma Show

3. கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த கபில் ஷர்மாவின் The Great Indian Kapil Sharma Show நிகழ்ச்சி இந்த வாரம் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. நெட்ஃபிளிக்ஸ் இல் ஸ்டிரீம் ஆகி வரும் கபில் ஷர்மாவின் இந்த நிகழ்ச்சி 35 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

The Rings of Power Season 2

2. The Rings of Power Season 2 என்கிற ஹாலிவுட் வெப் தொடர் கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் முன்னேறு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. இந்த வெப் தொடர் 45 லட்சம் பார்வைகளை பெற்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்டிரீம் ஆகி வருகிறது.

Taaza Khabar 2

1. பூவன் பாமின் வெப் தொடரான Taaza Khabar வெப்தொடரின் இரண்டாவது சீசன் தான் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது கடந்த வாரம் 3வது இடத்தில் இருந்த இந்த வெப் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஸ்டிரீம் ஆகி வருகிறது. இந்த வெப் தொடர் 52 லட்சம் பார்வைகளை பெற்று நம்பர் 1 இடத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள்... ரவீந்தருக்காக தனி Chair ரெடி பண்ணிய பிக்பாஸ்! அப்படி அந்த மனுஷனோட ஒரிஜினல் வெயிட்டு என்ன?

Latest Videos

click me!