
தொகுப்பாளினியும், நடிகையுமான விஜே ஜாக்குலின் தனது வசீகரமான ஆளுமை மற்றும் தனித்துவமான ஆற்றலால் ரசிகர்களை கவர்ந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட காமெடி நிகழ்ச்சியான கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக பலருக்கும் தெரியும் ஒருவராக அறியப்பட்டார்.
பொழுது போக்கிற்காக ஜாக்குலின் புகழ் பெற்றார். 2024 ஆம் ஆண்டின் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இடம் பெற்றுள்ளார். முதல் நாள் முதலே தனது நடிப்பை வெளிப்படுத்த தொடங்கிவிட்டார். 2ஆவது நாள் வெளியான புரோமோவில் கண்ணீர்விட்டு கதறவும் தொடங்கிவிட்டார்.
டிவி பிரபலமான ஜாக்குலினுக்கு பிக்பாஸ் எந்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதற்கு முன்னதாக அவரது குடும்பம், கணவர், சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் குறித்து ழுழுமையாக பார்க்கலாம் வாங்க…கடந்த 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் என்ற பகுதியில் பிறந்தார். தொகுப்பாளினியாக மீடியா வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார். இவரது உண்மையான பெயர் ஜாக்குலின் லிடியா.
தனது திறமையின் மூலமாக, காமெடி பேச்சின் வாயிலாக தனக்கென்று ரசிகர்கள் பட்டாளங்களை உருவாக்கிக் கொண்டார். காமெடி ஷோவான கலக்க போவது யார் என்ற நிகழ்ச்சியில் விஜே ரக்ஷனுடன் இணைந்து தொகுத்து வழங்கினார். ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக இருவரும் அறியப்பட்டனர். இருவருக்கும் இடையில் நல்ல கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆனதைத் தொடர்ந்து இருவரும் இணைந்து டான்ஸ் ஷோவிலும் கலந்து கொண்டனர். ஆனால், தோல்வி அடைந்து வெளியேறினர்.
தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக அவதாரம் எடுத்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் தொடரில் தேன்மொழி கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இதே போன்று தேன்மொழி பி ஏ என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்தார். இதுவரையில் திருமணம் செய்து கொள்ளவில்லை. மீடியா வாழ்க்கையில் இதுவரையில் எந்த சர்ச்சையிலும் ஜாக்குலின் சிக்கிக் கொள்ளவில்லை.
ஆனால், ஜாக்குலின் மற்றும் விஜே ரக்ஷன் இருவருக்கும் இடையிலான கெமிஸ்டரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆவதாக கூறப்பட்டது. பல நிகழ்ச்சிகளை இருவரும் இணைந்தே தொகுத்து வழங்கியிருக்கின்றனர். தொகுப்பாளினியாக இருந்து நாடகங்களில் நடித்த ஜாக்குலின் அதன் பிறகு படங்களிலும் நடித்தார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் திரைக்கு வந்து வெற்றிநடை போட்ட கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார். அதுவும் புகழ்பெற்ற நடிகையான சரண்யா பொன்வண்ணனுக்கு மகளாகவும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு தங்கையாகவும் நடித்தார். அந்த படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த ஜாக்குலின் தற்போது விஜய் டிவியில் மக்கள் செல்வன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். இவரது சொத்து மதிப்பு ரூ. 1 கோடி முதல் ரூ.3 கோடி வரையில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஜாக்குலினின் வருமானத்தின் பெரும் பகுதி தொலைக்காட்சி, நடிப்பு மற்றும் ஒப்புதல்கள் மூலமாகவே வந்துள்ளது.
கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்த ஜாக்குலினின் பெற்றோர் பற்றிய விவரங்கள் இல்லை. சென்னை மேரி மெட்ரிகுலேசன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த ஜாக்குலின் லயோலாவில் விஷூவல் கம்யூனிகேஷன் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். விஜய் டிவியில் இருந்து கொண்டு எப்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஜாக்குலின் கலந்து கொண்டார் என்று பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் வீட்டிற்குள் தனது நடிப்பை ஸ்டார்ட் பண்ணிட்டார்.
எப்படி கடைசி வரை ஜாக்குலின் தாக்கு பிடிப்பாரா? இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஏற்கனவே எவிக்ஷனுக்கான நாமினேஷனில் ஜாக்குலின் பெயர் இடம் பெற்றுள்ளது. இனி வரும் நாட்களில் அவரது நடிப்பு திறமை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.