கேரள மாநிலம் பாலக்காடை சேர்ந்த நடிகை ஸ்ரீகோபிகா நீலநாத், ஒரு மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கி, பின்னர் நடிகை ஓவியா நடிப்பில் வெளியான அடல்ட் காமெடி திரைப்படமான 90 எம் எல் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து வுல்ஃப் என்கிற திரைப்படத்திலும் நடித்தார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், இவரின் கவனம் சீரியல் பக்கம் சென்றது.