பாடகி ஜானகி தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத பாடகியாக வலம் வந்ததற்கு அவரின் பலகுரல் திறமையும் ஒரு காரணம். வாய்ஸை எப்படி வேண்டுமானாலும் மாற்றி பாடுவதில் கில்லாடியாக இருந்து வந்தவர் தான் ஜானகி. 60 வயசு பாட்டி முதல் 6 வயசு சுட்டிக் குழந்தை வரை அவர்களுக்கு ஏற்றார்போல் அவர் ஏராளமான படங்களில் தன் வாய்ஸை மாற்றி பாடி இருக்கிறார். அப்படி சிம்புவுக்காக ஜானகி ஆண் குரலில் பாடிய பாடல் பற்றி பார்க்கலாம்.
24
Singer Janaki
டி ராஜேந்தர் தன்னுடைய மகன் சிலம்பரசனை சிறுவயதில் இருந்தே நடிக்க வைத்து வருகிறார். அப்படி கடந்த 1989-ம் ஆண்டு வெளிவந்த சம்சார சங்கீதம் திரைப்படத்தில் டி.ராஜேந்தர் உடன் சேர்ந்து அவரது மகன் சிம்புவும் நடித்திருந்தார். இப்படத்திற்கு இசையும் டி.ராஜேந்தர் தான். தன் மகனுக்காகவே அவர் பார்த்து பார்த்து இசையமைத்த பாடல் தான் ‘ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார்’ பாடல். அப்பாடலில் ஐ ஆம் எ லிட்டில் ஸ்டார்... ஆவேன் நான் சூப்பர்ஸ்டார் என அழகாக மழலை குரலில் பின்னணி பாடியிருப்பார்கள்.
சிம்புவுக்காக அந்த பாடலை பாடியது குழந்தை யாரும் இல்லை, பாடகி ஜானகி தான் தன்னுடைய குரலை மாற்றி மழலையாக அப்பாடலை பாடி அசத்தி இருந்தார். அதுவும் ஆண் குரலில் அவர் பாடிய இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. சிம்புவுக்கு ஒரு அடையாளமாகவும் இந்தப் பாடல் திகழ்ந்தது. சிம்புவுக்கு மட்டுமின்றி ஷாலினி குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்களுக்கும் பாடகி எஸ் ஜானகி மழலை குரலில் பாடி அசத்தி இருக்கிறார்.
44
Janaki Sing a song for simbu in male voice
மேலும் 1981-ம் ஆண்டு பாக்கியராஜ் நடிப்பில் வெளிவந்த மெளன கீதங்கள் திரைப்படத்தில், ‘டாடி டாடி ஓ மை டாடி’ என்கிற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. சிறுவன் பாடுவது போல் இருந்தாலும் இந்தப் பாடலைப் பாடியதும் ஜானகி தான். இதுதவிர ரங்கா படத்தில் ரஜினியுடன் நடித்த குட்டிப்பையன் பாடும் ‘பேஸ்ட் இருக்கு பிரஷ் இருக்கு எழுந்திரு மாமா’ பாடலும் ஜானகி தன் குரலை மாற்றிப் பாடிய பாடல் தான். இப்படி ஜானகி தன்னுடைய திறமையை நிரூபித்த படங்கள் ஏராளம். அதனால் தான் அவரது பாடல்கள் காலம் கடந்தும் கொண்டாடப்படுகின்றன.