தியேட்டர் ரிலீஸ்
கோலிவுட்டில் கடந்த வாரம் சிறு பட்ஜெட் படங்கள் வரிசைகட்டி ரிலீஸ் ஆன நிலையில், இந்த வாரம் பிரம்மாண்ட படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வேட்டையன்
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் பகத் பாசில், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற அக்டோபர் 10-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.