சாச்சனாவை தொடர்ந்து பிக்பாஸில் அடுத்த எலிமினேஷன் - சிக்கியது யார்; யார் தெரியுமா?

First Published | Oct 8, 2024, 7:40 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் முதல் வார எலிமினேஷனுக்கான நாமினேஷன் நேற்று நடைபெற்ற நிலையில், அதில் 6 பேர் இடம்பெற்று உள்ளனர்.

Bigg Boss Tamil Season 8 first week eviction

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் அமர்களமாக ஆரம்பமாகி உள்ளது. இந்த சீசனில் தொகுப்பாளராக களமிறங்கி உள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதல் எபிசோடிலேயே சிக்சர் அடித்துவிட்டார். அதுமட்டுமின்றி இம்முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என சொன்னது போல், இதுவரை தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் நடைபெறாத ஒரு சம்பவம் முதல் நாளிலேயே நடந்தது. அதாவது நிகழ்ச்சி தொடங்கிய முதல் 24 மணிநேரத்திலேயே ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதில் சக போட்டியாளர்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் சாச்சனா முதல் நாளே எலிமினேட் செய்யப்பட்டார்.

Sachana

சாச்சனாவின் எவிக்‌ஷனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் வழக்கமான கேம் ஆரம்பித்தது. அதன்படி இந்த வாரத்திற்கான கேப்டனை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது. இந்த சீசனின் தீம் படி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே தான் போட்டியே நடைபெற்றது. அந்த போட்டியில் தர்ஷிகா வெற்றிபெற்று, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் கேப்டன் ஆனார். இதனால் இந்த வார நாமினேஷனில் யாரும் தன்ஷிகாவை தேர்வு செய்ய முடியாது.

இதையும் படியுங்கள்... கனவோடு வந்து.. கண்ணீரோடு வெளியேறிய முதல் பிக்பாஸ் போட்டியாளர் இவர் தான்!

Tap to resize

Bigg Boss Tamil Season 8 contestants

இதையடுத்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு நபரை நாமினேட் செய்தனர். அதில் அதிக வாக்குகள் பெற்ற 6 பேர் இந்த வார நாமினேஷனில் சிக்கி உள்ளனர். அதன்படி ரவீந்தர் சந்திரசேகர், முத்துக்குமரன், செளந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத், ரஞ்சித் ஆகிய 6 பேர் தான் இந்த வார நாமினேஷனில் சிக்கி உள்ளனர். இவர்களில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர் இந்த வார இறுதியில் எலிமினேட் செய்யப்படுவார்.

Bigg Boss Tamil Season 8 Nomination List

பிக்பாஸ் வரலாற்றில் முதல் வாரமே டபுள் எவிக்‌ஷன் நடைபெறும் சீசன் இதுவாக தான் இருக்கும். இதற்கு முன்னர் ஒரு போட்டியாளர் மட்டும் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கின்றார். அதிலும் சில சீசன்களில் முதல் வாரம் எலிமினேஷனே இல்லாமலும் இருந்திருக்கிறது. பிக்பாஸ் என்றாலே எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது தான். அதனால் இந்த சீசனில் இதுபோன்று பல்வேறு ஆச்சர்யங்கள் இருக்கும். அது என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... அன்ஷிதாவை நாமினேட் செய்த அர்னவ்; நோஸ் கட் கொடுத்து சைலன்டாக்கிய பிக் பாஸ் - ஏன்? வீடியோ!

Latest Videos

click me!