நடக்க முடியல; வலியால் துடித்த ரவீந்தர் - பிக்பாஸை விட்டு வெளியேறுகிறாரா Fatman?

First Published | Oct 8, 2024, 9:42 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருக்கும் ஃபேட்மேன் என்கிற ரவீந்தர் நடக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருவதால் அவர் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Ravinder Chandrasekar

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என 18 பேர் கலந்துகொண்டனர். இதில் யாரும் எதிர்பாராத விதமாக முதல் நாள் முடிவிலேயே ஒரு நபரை எலிமினேட் செய்து அதிர்ச்சி கொடுத்தார் பிக்பாஸ்.

Fatman Ravinder

அதன்படி முதல் ஆளாக இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு சாச்சனா வெளியேறினார். சாச்சனாவின் எலிமினேஷனுக்கு பின்னர் இத வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. இதில் முத்துக்குமரன், ஜாக்குலின், ரவீந்தர் சந்திரசேகர், ரஞ்சித், அருண் பிரசாத், செளந்தர்யா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் யாருக்கு மக்கள் குறைவான வாக்குகளை அளித்திருக்கிறார்களோ அந்த நபர் இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி முன்னிலையில் எலிமினேட் செய்யப்படுவார்.

இதையும் படியுங்கள்... சாச்சனாவை தொடர்ந்து பிக்பாஸில் அடுத்த எலிமினேஷன் - சிக்கியது யார்; யார் தெரியுமா?

Tap to resize

Bigg Boss Contestant Ravinder Chandrasekar

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கேப்டனை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியும் நடத்தப்பட்டது. இதில் எதிர் எதிர் திசையில் சேர்கள் போடப்படு, ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் அமரவைக்கப்பட்டு, அதில் யார் இடத்தை பிடிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்று அடுத்த நிலைக்கு செல்வார்கள். சேரில் இடம்பிடிக்க முடியாதவர்கள் ஒவ்வொரு ரவுண்டிலும் வெளியேற்றப்படுவார்கள். அப்படி இந்த போட்டியில் முதல் ஆளாக ரவீந்தர் வெளியேறினார்.

Ravinder Chandrasekar injured in Bigg Boss

மற்ற போட்டியாளர்கள் மடமடவென ஓடிச் சென்று இடம்பிடித்துவிட்டார்கள். ஆனால் ரவிந்தரால் தன்னுடைய கனத்த உடலுடன் ஓட முடியவில்லை. இருந்தாலும் அவர் முயற்சி செய்தார். அதற்கு சக போட்டியாளர்கள் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். ரவீந்தர் ஓடி வந்தது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. ஓடியதால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு வலியால் துடித்திருக்கிறார் ரவீந்தர். இதையடுத்து இரவில் அவருக்கு வலி நிவாரணி அளிக்கப்பட்டு மாத்திரையும் வழங்கப்பட்டது.

நடக்க முடியாமல் இருந்த ரவீந்தரை சக போட்டியாளர்கள் தான் கை தாங்களாக அழைத்து வந்து படுக்க வைத்தனர். ஒருவேளை அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏதேனும் ஏற்பட்டு இருந்தால் அவர் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... 24 மணிநேரத்தில் நடந்த எலிமினேஷன்; உடைந்து அழுத சாச்சனா! நெஞ்சை உருக வைத்த வீடியோ

Latest Videos

click me!