ரவீந்தருக்காக தனி Chair ரெடி பண்ணிய பிக்பாஸ்! அப்படி அந்த மனுஷனோட ஒரிஜினல் வெயிட்டு என்ன?

Published : Oct 08, 2024, 12:40 PM IST

Ravinder Chandrasekar Weight : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் ஒரிஜினல் வெயிட்டு பற்றி பார்க்கலாம்.

PREV
15
ரவீந்தருக்காக தனி Chair ரெடி பண்ணிய பிக்பாஸ்! அப்படி அந்த மனுஷனோட ஒரிஜினல் வெயிட்டு என்ன?
Ravinder Chandrasekar

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார் ரவீந்தர் சந்திரசேகர். தயாரிப்பாளரான இவர் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தின் மூலம் சுட்ட கதை, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ள அவர், கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகராக பணியாற்றி வந்தார். ரசிகர்களால் செல்லமாக ஃபேட்மேன் என அழைக்கப்படும் ரவீந்தருக்கு முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து கடந்த 2022-ம் ஆண்டு அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

25
BiggBoss Ravinder Chandrasekar

அவர் இரண்டாவதாக சீரியல் நடிகை மகாலட்சுமியை கரம்பிடித்தார். இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. அந்த சமயத்தில் இவர்கள் திருமணம் தான் தமிழ் சினிமாவில் ஹைலைட்டாக பேசப்பட்டது. அதுமட்டுமின்றி அந்த சமயத்தில் ரவீந்தரை உருவகேலி செய்தும் பலர் ட்ரோல் செய்து வந்தனர். அதையெல்லாம் கண்டுகொள்ளாத ரவீந்தர் தன் மனைவி மகாலட்சுமி உடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அடிக்கடி இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்... சாச்சனாவை தொடர்ந்து பிக்பாஸில் அடுத்த எலிமினேஷன் - சிக்கியது யார்; யார் தெரியுமா?

35
Producer Ravinder Chandrasekar

ஒரு தயாரிப்பாளர் என்பதை தாண்டி சோசியல் மீடியா பிரபலமாக உருவெடுத்துள்ள ரவீந்தர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். அவர் இந்த சீசனில் டஃப் ஆன போட்டியாளராகவும் கருதப்படுகிறார். பிக்பாஸ் வீட்டில் மன வலிமை சார்ந்த டாஸ்க்குகள் மட்டுமின்றி உடல் வலிமை சார்ந்த டாஸ்க்குகளும் வழங்கப்படும். அப்படி நேற்று கொடுக்கப்பட்ட கேப்டன்ஸி டாஸ்கில் ஓட முயற்சித்த ரவீந்தருக்கு காலில் காயம் ஏற்பட்டு தற்போது அவரால் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

45
Mahalakshmi, Ravinder Chandrasekaran

ஒருவேளை அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏதேனும் ஏற்பட்டால் அவர் வெளியேற்றப்படவும் வாய்ப்புகள் உள்ளது. இப்படி ஒரு முறை ஓடியதற்கே காலில் காயம் ஏற்படும் அளவுக்கு அதிக உடல் எடை உடன் இருக்கும் ரவீந்தரின் ஒரிஜினல் வெயிட் பற்றி பார்க்கலாம். அதன்படி அவரின் உடல் எடை 125 கிலோ இருக்குமாம். இவரின் உடல் எடையை தாங்கும் விதமாக பிக்பாஸ் குழுவினர் பிரத்யேக சேர் ரெடி பண்ணி இருக்கிறார்களாம். 

55
Ravinder Chandrasekar weight

இதை ரவீந்தர் சந்திரசேகரே பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனிலேயே கலந்துகொள்ள ரவீந்தருக்கு வாய்ப்பு வந்துள்ளது. அந்த சமயத்தில் முதலில் ஒப்புக்கொண்டு, அதற்கான ஆடிஷனிலும் தேர்வாகி இருக்கிறார் ரவீந்தர். அதன்பின்னர் அவரை வரவழைத்து அவருக்காக பிரத்யேகமாக சேர் செய்ய அளவெல்லாம் எடுத்தார்களாம். ஆனால் கடைசி நேரத்தில் பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக ரவீந்தர் கூறி இருந்தார். அப்போது அவர் தவறவிட்ட வாய்ப்பு 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கிடைத்திருக்கிறது. 

இதையும் படியுங்கள்... நடக்க முடியல; வலியால் துடித்த ரவீந்தர் - பிக்பாஸை விட்டு வெளியேறுகிறாரா Fatman?

Read more Photos on
click me!

Recommended Stories