ஆயுத பூஜை ஸ்பெஷல்... விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 3 சூப்பர் ஹிட் திரைப்படங்கள்!

First Published | Oct 8, 2024, 1:39 PM IST

ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 11-ஆம் தேதி, விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 3 சூப்பர் ஹிட் படங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
 

Ayutha Puja Special Movies

இந்த வாரம் வெள்ளிக்கிழமை அதாவது அக்டோபர் 11-ஆம் தேதி, ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால்... இந்த வாரம் சினிமா ரசிகர்களுக்கு செம்ம வேட்டை என கூறலாம். ஓடிடி தளங்களில் ஒருபக்கம் புதிய படங்கள் வரிசை கட்டி நிற்க, அதே போல் திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன், ஜீவாவின் பிளாக் போன்ற படங்கள் வெளியாக உள்ளன.
 

Parking Movie

என்ன தான் திரையரங்குகளில் தலைவரின் படமே ரிலீஸ் ஆனாலும்... அன்றைய தினம் இல்லத்தரசிகள் திரையரங்குக்கு சென்று திரைப்படம் பார்ப்பது என்பது சாத்தியமற்றது. காரணம் தலைவரின் ரசிகர்களே திரையரங்கை ஆக்கிரமித்துவிடுவார்கள். எனவே வீட்டில்... தங்களுடைய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு சாவகாசமாக திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். 

சுந்தரி சீரியல் நடிகை ஸ்ரீகோபிகாவுக்கு திருமணம் நடந்து முடிந்தது! மாப்பிள்ளை யார் தெரியுமா?

Tap to resize

Aranmanai 4 Movie

குழந்தைகள் முதல் பெரியவர்களை டார்கெட் செய்து, தொலைக்காட்சிகள் போட்டி போட்டுகொண்டு புதிய படங்களை ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில், விஜய் டிவி தொலைக்காட்சி 3 சூப்பர் ஹிட் படங்களை ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 11-ஆம் தேதி ஒளிபரப்ப உள்ளது. அந்த வகையில், அக்டோபர் 11-ஆம் தேதி காலை 11:00 மணிக்கு, விஜய் ஆண்டனி, நடித்து, தயாரித்து, இயக்கி நடித்த 'பிச்சைக்காரன்' திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. 

Bigg Boss 2 hours Show:

அக்டோபர் 11 ஆம் தேதி, மதியம் 2:30 மணிக்கு... ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடித்து வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற பார்க்கிங் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இதை தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு திரைக்கு வந்து சில மாதங்கள் மட்டுமே ஆன, அரண்மனை திரைப்படம் ஒளிபரப்ப பட உள்ளது. சிறப்பு ரியாலிஸ்ட்டி ஷோக்களாக பட்டி மன்றம் மற்றும் ஆயுத பூஜை ஸ்பெஷல் பிக்பாஸ் நிகழ்ச்சி 2-மணிநேரம்  ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா - தனுஷு இணைகிறார்களா? நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?

Latest Videos

click me!