இதுவரை தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக மிக நேர்த்தியாக வழி நடத்தி வந்தார் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த சூழலில் தன்னுடைய திரைப்பட பணிகளுக்காக அவர் முழு வீச்சில் செயல்பட உள்ளதால், தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அதிலும் குறிப்பாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பங்கேற்ற முதல் நாளிலேயே, சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விலாசி, மிகச்சிறந்த நடுவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.
உண்மையில் நெத்திப்போட்டில் அடித்தார் போல பேசும் விஜய் சேதுபதியின் கமெண்ட்ஸ், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது என்றே கூறலாம். கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 18 போட்டியாளர்களோடு கோலாகலமாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. பல புதிய முகங்களும், ஏற்கனவே மக்களுக்கு அறிமுகமான சில பழைய முகங்களும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்றிருக்கின்றனர். மொத்தம் ஒன்பது ஆண்கள் ஒன்பது பெண்கள் என்று 18 பேர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.
சாச்சனாவை தொடர்ந்து பிக்பாஸில் அடுத்த எலிமினேஷன் - சிக்கியது யார்; யார் தெரியுமா?