'சிறகடிக்க ஆசை' சீரியல் ஹீரோ, தன்னுடைய காதலி யார் என்பதை புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'சிறகடிக்க ஆசை' சீரியலின் நாயகன் வெற்றி வசந்த் ... தற்போது தன்னுடைய காதலி யார் என்பதை அறிவித்துள்ளது மட்டும் இன்றி, இந்த வாரத்தில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதையும் உறுதி செய்துள்ளார்.
25
Vijay tv ponni serial fame Vaishu
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்குமே... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக டாப் 5 TRP பட்டியலில் இடம்பெற்று, சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல், தற்போது வெற்றிகரமாக 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை குமரன் என்பவர் இயக்க, வெற்றி வசந்த் ஹீரோவாக நடித்து வருகிறார்... ஹீரோயினாக கோமதி பிரியா நடித்து வருகிறார்.
வழக்கமான குடும்ப கதையை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும்... முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த் அடிக்கும் கவுண்டர்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் ஒரு ஜாடையில் நடிகர் விஜய் சேதுபதியோடு இருப்பது மட்டும் இன்றி, அவரை போலவே நடிப்பதாகவும் ரசிகர்கள் அடிக்கடி கூறுவது உண்டு.
45
Raveal Love
சமூக வலைதளத்தின் பக்கம் அவ்வப்போது வந்து செல்லும் வெற்றி வசந்த் ... தற்போது முதல் முறையாக தன்னுடைய காதலி யார் என்பதை அறிவித்துள்ளார். அவரும் ஒரு சீரியல் ஹீரோயின் என்பது தான் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஷயம். ராஜா ராணி 2 சீரியலில் குணச்சித்திர வேடத்தில் நடித்து, பின்னர் 'பொன்னி' சீரியல் மூலம் ஹீரோயினாக மாறியவர் வைஷு. இவரை தான் வெற்றி வசந்த் காதலித்து வருவதாக அறிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் ரொமான்டிக் பாடல் ஒன்றிக்கு ஆட்டம் போட்டு வெளியிட்டுள்ள வீடியோவில்... இந்த மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பொன்னி சீரியலில் வசந்த் வெற்றி கேமியோ ரோலில் நடித்தபோது... வைஷுவுக்கு அண்ணனாக நடித்திருந்தார். ஆனால் இப்போது வைஷு தான் தன்னுடைய காதலி என கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். ரியல் ஜோடியாக மாற உள்ள இவர்களுக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.