அஜித்தின் வலிமை படத்தை எச்.வினோத் இயக்கி இருந்தார். போனி கபூர் தயாரிப்பில் அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராகி இருந்தது. கடந்தாண்டே ரிலீசாக வேண்டிய இப்படம் கொரோனா காரணமாக தடைபட்டு நீண்ட நெடிய போராட்டத்துக்கு பின் வெளியானதால், இதற்கு எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. ஆனால் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம். விமர்சன ரீதியாகவும் கலவையான விமர்சனங்களையே இப்படம் பெற்றது.
இதையும் படியுங்கள்... Shivani : நாளுக்கு நாள் கூடும் கவர்ச்சி... ஷிவானியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், இப்படங்களின் வசூல் நிலவரம் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். அதன்படி “அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை விட வலிமை படம் 10 சதவீதம் குறைவாகவே வசூலித்ததாகவும், அதேபோல் விஜய்யின் மாஸ்டர் படத்தைவிட பீஸ்ட் படம் 10 சதவீதம் குறைவான வசூலை ஈட்டியதாகவும் அவர் கூறினார். ஆனால் இரண்டுமே தோல்விப் படங்கள் கிடையாது, அப்படி சொன்னால் அது நியாயம் இல்லை” என அவர் கூறியுள்ளார்.