Veetla Vishesham
ஆர்.ஜே.பாலாஜி வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் காமெடி நடிகராக சின்ன சின்ன கதாபாத்திரங்கள் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கினார். பின் ஹீரோவாக ஒரு படத்தில் கூட கலக்கினார், அப்படியே இயக்குனர் அவதாரமும் எடுத்தார்.
Veetla Vishesham
முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்ட இந்த படத்தில், ஆர்.ஜே.பாலாஜியும் சேர்ந்து, நடிகை ஊர்வசி, சத்யராஜ், லலிதா என அனுபமிக்க நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். படத்திற்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர். இப்படத்தை வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். குறிப்பாக பேமிலி ஆடியன்ஸ் படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளனர்.
Veetla Vishesham
இந்த நிலையில், இந்த படத்தின் வசூல் விவரம் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் நாளிலேயே நல்ல வசூலை எட்டிய வீட்ல விசேஷம் தற்போது வரை மொத்தமாக ரூ. 10 கோடிக்கு மேல் வசூலித்து ஹிட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்கின்றனர் சினிமா துறை வல்லுநர்கள். முன்னதாக, படத்திற்கு மக்கள் கொடுத்த நல்ல வரவேற்பிற்கு, படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து படத்தை ஹிட் ஆக்கியதற்கு நன்றி தெரிவித்தார்கள்.
மேலும் படிக்க....Honeymoon: உலகின் ஆபத்தான ரயிலில் ஹனிமூன் போட்டோஷூட்..ஏன்பா உங்களுக்கு வேற இடமே இல்லையா? விளாசும் நெட்டிசன்கள்