தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் பிரியா பவானி சங்கர். பின்னர் ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மேயாதமான் படத்தில் வைபவ் -க்கு ஜோடியாக அசத்தினார் பிரியா பவானி. அறிமுகமாகி 6 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 17 படங்கள், 2 வெப் சீரிஸ் என தனது மார்க்கெட்டை எங்கோ கொண்டு சென்றுவிட்டார். அதுவும் சாதாரண படம் கிடையாது இவர் நடிப்பில் வெளியவுள்ள பல படங்கள் முன்னணி நாயகர்களுடையது தான் அந்த லிஸ்ட்டில் என்னென்ன படங்கள் என்பதை பற்றி பார்ப்போம்...