சினிமாவில் அரைச்ச மாவையே அரைப்பது என்பது புதிதல்ல, அந்த வகையில் ஒரே கதையம்சத்தில் வெளிவந்த மூன்று திரைப்படங்களில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.
சினிமா பொறுத்தவரை சில கதைகள் மறுபடி மறுபடி வருவது எதேர்ச்சையாக அமையும். அதற்கு பல உதாரணங்கள் உண்டு. சமீபத்திய உதாரணம் மன சங்கர வர பிரசாத் காரு. அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்துள்ள இப்படம் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. கணவன் - மனைவி பிரிவும், மீண்டும் மனைவி குழந்தைகளுடன் இணைய கணவன் செய்யும் முயற்சிகளுமே இப்படத்தின் கதைக்களம்.
25
துளசி
போயப்பட்டி ஸ்ரீனு இயக்கி 2007ல் வந்த துளசி படத்தின் ஒன் லைனும் இதுதான். துளசி தன் சொந்த ஊருக்கு மனைவி வசுந்தரவுடன் செல்வார். அங்கு துளசியின் எதிராளி குடும்பம் அவரை சீண்ட, சண்டைக்கு போவார். அவரது இந்த அடிதடி குணம் பிடிக்காத வசுந்தரா தன் மகனை அழைத்துக் கொண்டு துளசியை பிரிந்து செல்வார். கடைசியில் வில்லனிடம் இருந்து மகனை காப்பாற்ற, கணவன் மனைவி மீண்டும் இணைவார்கள்.
35
விஸ்வாசம்
துளசி படத்தில் இருந்து Inspire ஆகி 'சிறுத்தை' சிவா உருவாக்கியது தான் 'விஸ்வாசம்'. கணவன் - மனைவி பிரிவு என்ற லைனையும், மகன் செண்டிமெண்டை மகளாக மாற்றி கதையை உருவாக்கி இருப்பார். கணவர் ஊருக்குள் பெரிய ரவுடி, அவரது இந்த குணத்தால் மகளுக்கு ஆபத்து வரும் என்ற காரணத்தால் கணவரை மனைவி பிரிவதாகவும், பின்பு மகள் உயிருக்கு ஆபத்து என்பதால் அவரை பாத்துகாக்க மனைவி வீட்டில் ஒரு பாடிகாட் ஆக நுழைவதாக கதை போகும்.
தெலுங்கில் இருந்து வந்த இந்தக் கதையை இப்போது மீண்டும் 'மன சங்கர வரப்பிரசாத் காரு' மூலம் தெலுங்குக்கே கொண்டு போயிருக்கிறார் அனில் ரவிப்புடி. முந்தைய கதைகள் போல இதில் ஹீரோ ரவுடி கிடையாது, தேசிய பாதுகாப்பு படையில் வேலை பார்க்கிறார். ஈகோ காரணமாக கணவன் - மனைவி சண்டை, குழந்தைகளை அழைத்துக் கொண்டு கணவரை பிரிந்து விவாகரத்து பெற்று செல்கிறார் மனைவி. முன்னாள் மனைவி குடும்பத்துக்கு ஆபத்து வர அதில் இருந்து காப்பாற்ற செல்கிறார் ஹீரோ.
55
ஒரே ஹீரோயின்
இப்படி மேற்கண்ட மூன்று படங்களிலும் அரைச்ச மாவையே அரைத்திருந்தாலும், அது ரசிகர்களை கவரும் வகையில் இருந்ததால் மூன்று படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது. இதில் இன்னொரு காமெடி என்னவென்றால், இந்த மூன்று படத்திலும் நாயகியாக நடித்தது நயன்தாரா தான். ஒரே கதைனு தெரிஞ்சும் 3 படத்திலும் நாயகியாக நடித்து நன்கு கல்லாகட்டி இருக்கிறார் நயன்தாரா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.