தனுஷின் 54-வது படம் ‘கர’... இந்த ஷார்ட் டைட்டில் பின்னணியில் இப்படியொரு கதை இருக்கா..!

Published : Jan 15, 2026, 12:40 PM IST

நடிகர் தனுஷ், போர் தொழில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்துள்ள படத்திற்கு கர என பெயரிடப்பட்டு உள்ளது. அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

PREV
14
Dhanush 54th Movie Kara

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். கடந்த ஆண்டில் மட்டும் இவர் நடிப்பில் மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. அந்த மூன்றுமே வெவ்வேறு மொழி படங்கள். குறிப்பாக குபேரா தெலுங்கு மொழி படம், அடுத்ததாக தமிழில் இட்லி கடை படம் வந்தது. இறுதியாக அவர் நடித்த இந்தி படமான தேரே இஷ்க் மே திரைப்படம் திரைக்கு வந்தது. இந்த மூன்று படங்களுமே அந்தந்த மொழிகளில் மாபெரும் வெற்றிபெற்றன. இதுதவிர தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படமும் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது.

24
தனுஷின் 54-வது படம்

இப்படி ஆண்டுக்கு 3-4 படங்களை அசால்டாக இறக்கி வரும் தனுஷ். இந்த ஆண்டும் தன்னுடைய பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டார். அவரின் அடுத்த வெளியீடாக வர உள்ள படம் டி54. தனுஷின் 54வது படமான இதை விக்னேஷ் ராஜா இயக்கி உள்ளார். போர் தொழில் என்கிற மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா, தனுஷ் உடன் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

34
டைட்டில் அறிவிப்பு

இந்த நிலையில், டி54 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அதன் டைட்டிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அப்படத்திற்கு கர என பெயரிடப்பட்டு உள்ளது. மேலும் அந்த போஸ்டரில், நாம உயிரோட வாழ சில சமயம் ஆபத்தான நிலையிலும் இருந்தாகனும் என்கிற கேப்ஷனும் இடம்பெற்றுள்ளது. போஸ்டர் டிசைன், கேப்ஷன், தனுஷ் லுக் எல்லாம் பார்க்கும்போது ஒரு ரிவென்ஜ் த்ரில்லர் போல தெரிகிறது. இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

44
கர என்றால் என்ன?

இந்த படத்தின் டைட்டிலை பார்த்த உடன் பலருக்கும் முதலில் வரும் கேள்வி, அது என்ன கர? அதற்கு என்ன அர்த்தம் என்பது தான். 60 வருட ஆண்டு கணக்குப்படி தமிழில் 25-வது வருடம் கர. சம்வத்சரம் எனப்படும் ஆண்டு வட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு 60 பெயர்கள் இருக்கும். ஒருமுறை பட்டியல் முடிந்ததும், மீண்டும் சுழற்சி முறையில் அதே பெயர்கள் வரும். அதில் ஒரு பெயர் தான் கர. கடைசி கர வருடம் வந்தது 2011-12ம் வருடம் வந்தது. இதைவைத்து பார்க்கும் போது இப்படம் அந்த காலகட்டத்தில் நடக்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories