நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா, இளவரசு, தம்பி ராமைய்யா நடிப்பில் பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆகி இருக்கும் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜீவா நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள படம் தலைவர் தம்பி தலைமையில். மலையாள இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கியுள்ள இப்படத்தில் ஜீவா உடன் தம்பி ராமையா, இளவரசு, ஜெய்வந்த், பிரார்த்தனா நாதன், ஜென்சன் திவாகர், சர்ஜின் குமார், மணிமேகலை, ராஜேஷ் பாண்டியன், அமித் மோகன், சுபாஷ் கண்ணன், அனு ராஜ், சரத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
24
தலைவர் தம்பி தலைமையில் பட கதை
ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணம் நடக்க ஏற்பாடுகள் தயார் ஆகிறது. பக்கத்து வீட்டில் உள்ள தாத்தா திடீரென காலமாகி விடுகிறார். மறுநாள் காலை பத்தரை மணிக்கு திருமணத்தை நடத்தியே தீர்வது என மணமகள் வீட்டாரும். அதே நேரத்தில் இறுதி ஊர்வலம் என இழவு வீட்டாரும் சண்டை போடுகிறார்கள். அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரான ஜீவா இருவருக்கும் இடையில் எப்படி அவஸ்தைப்படுகிறார். கடைசியில் தீர்வு என்ன? என்பதை பக்கா காமெடியில் கலகலவென சொல்கிறது தலைவர் தம்பி தலைமையில் படம்.
34
தலைவர் தம்பி தலைமையில் விமர்சனம்
எப்போதும் ஒரு படத்தின் வெற்றிக்கு கதையும் இயக்குநர் தான் மிக முக்கியம். பொங்கலுக்கு வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம் அதை மீண்டும் நிரூபித்துள்ளது. ரப்பர் பந்து ஜென்சன் தவிர சிரிப்பு உண்டாகிய அனைவரும் புதியவர்கள். குறிப்பாக யூடியூபர்கள். நாகர்கோவில் ஸ்லாங் படத்துக்கு பெரிய பிளஸ். ஜென்சன் திவாகர் தவிடு என்ற கேரக்டரில் நடிப்பிலும் காமெடியிலும் கலக்கி இருக்கிறார். விஷ்ணு விஜய்யின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பப்லு அஜுவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
சண்டைக்கு இழுக்கும் ஜெய்வந்த் கேரக்டரும் அருமை. ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். இயக்குனர் நிதிஷ் சகாதேவ் மலையாளத்தில் பேசில் ஜோசப் நடித்த பாலமி என்ற படத்தை இயக்கியுள்ளார். தனது தாத்தாவுடன் அவர் காசிக்குச் செல்லும் கதையை மிகச் சிறப்பாக எடுத்து இருப்பார். தலைவர் தம்பி படத்தில் கதை திரைக்கதை வசனம் நடிகர்கள் காமெடி என அனைத்தும் சூப்பர். பொங்கலுக்கு வந்த படங்களில் காமெடி விருந்து தந்த படம் இது தான்.