நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ள வா வாத்தியார் திரைப்படத்தின் எக்ஸ் தள விமர்சனங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கார்த்தி நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள படம் வா வாத்தியார். நலன் குமாரசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி, இளவரசு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படம் பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர் இன்று திரைக்கு வந்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்த்த நெட்டிசன்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
26
Vaa Vaathiyaar Twitter Review
வா வாத்தியார் திரைப்படம் கார்த்தியின் ஒன் மேன் ஷோ என்றே சொல்லலாம். அவர்தான் படத்தை முழுக்க முழுக்க தன்னுடைய தோளில் தாங்கிச் சென்றிருக்கிறார். இரண்டாம் பாதியில் வாத்தியாராக வரும் அவரின் டிரான்ஸ்பர்மேஷனும், மேனரிசங்களும் சூப்பராக உள்ளது. கார்த்தியின் நடிப்பு அருமை என பதிவிட்டுள்ளார்.
36
வா வாத்தியார் விமர்சனம்
கார்த்தியின் வா வாத்தியார் மற்றுமொரு பரிசோதனை முயற்சி. ஆரம்பத்தில் வழக்கமான டெம்ப்ளேட் சினிமா போல தொடங்கி, பின்னர் அது ஒரு ஆல்டர் ஈகோ கான்செப்டுக்குள் செல்கிறது. ஒரு நல்ல சோசியல் மெசேஜ் சொல்லும் படம். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை அருமை. வில்லன் கதாபாத்திரம் இன்னும் நன்றாக எழுதி இருக்கலாம். இந்தப் படத்தைப் பார்த்தால் புரட்சித் தலைவர் ரசிகர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
லாஜிக் இல்லா மேஜிக் திரைப்படம் தான் வா வாத்தியார். இப்ப்டம் அனைத்து எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் சமர்ப்பணம். இடைவேளை காட்சியும், இரண்டாம் பாதியிலும் கார்த்தியின் நடிப்பு வேறலெவல். படத்தின் ஜானரே சர்ப்ரைஸ் ஆன ஒன்றாக உள்ளது. உங்கள் குடும்பத்துடன் சென்று வா வாத்தியார் படத்துடன் இந்த பொங்கலைக் கொண்டாடுங்கள். கார்த்தி மீண்டும் என்னை ஆச்சர்யப்படுத்திவிட்டார். இந்த பொங்கலுக்கு ஒரு நல்ல தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸாக இப்படம் உள்ளது என பதிவிட்டுள்ளார்.
56
வா வாத்தியார் எக்ஸ் தள விமர்சனம்
வா வாத்தியார் ரொம்ப ஆவரேஜ் படம். எம்ஜிஆர் வெறியன் ராஜ்கிரணின் பேரன் கார்த்தி, நம்பியார் போல இருக்க. ராஜ்கிரணின் இறப்புக்கு பின் mgr ஆன்மா கார்த்தி உடம்புல போய்... உஷ்ஷ்ஷ்... பழைய மாவில் சுட்ட அதே பழைய தோசை. சந்தோஷ் நாராயணன் இசைகூட செட் ஆகல என குறிப்பிட்டு உள்ளார்.
66
வா வாத்தியார் ரிவ்யூ
வா வாத்தியார் படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி சிறப்பாக உள்ளது. பாடல்கள் தான் படத்தின் வேகத்தடையாக அமைகின்றன. தயவு செஞ்சு பாடல்களை ட்ரிம் பண்ணிருங்க. எம்ஜிஆர் அம்சம் படத்தில் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. கார்த்தி நேர்த்தியாக அந்த ரோலை ஏற்று நடித்திருக்கிறார். இது ஒரு நலன் குமாரசாமி படம் போல் தெரியவில்லை. முற்றிலும் ஒரு வித்தியாசமான அனுபவம். கீர்த்தி ஷெட்டி நடிப்பு ஓகே தான். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை அருமை என குறிப்பிட்டு உள்ளார்.