சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் பராசக்தி திரைப்படத்தின் முதல் பாதி விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பராசக்தி திரைப்படம் சிவகார்த்திகேயனின் 25-வது படமாகும். இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். சூரரைப் போற்று, இறுதிச் சுற்று படங்களை போல் இதையும் ஒரு உண்மை சம்பவத்தை தழுவி தான் எடுத்துள்ளார் சுதா. இப்படத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா, பேசில் ஜோசப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பராசக்தி திரைப்படம் பொங்கல் விருந்தாக இன்று திரைக்கு வந்துள்ள நிலையில், அதன் முதல் பாதி விமர்சனத்தை பார்க்கலாம்.
25
பராசக்தி ட்விட்டர் விமர்சனம்
முதல் பாதி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. காட்சிகள் இயல்பாகவும் நடிகர் தேர்வு வலுவாகவும் இருந்தாலும், மெதுவாக நகரும் கதையோட்டத்தை மறைக்க முடியவில்லை. திரைக்கதை சொல்லும் விதம் சீராக இருந்தாலும், பார்வையாளரை இழுக்கும் வலுவான தாக்கம் இல்லை. உணர்ச்சிப் பூர்வமான ஆழம் குறைவாக இருப்பதால் கதையுடன் இணைவதில் சற்று தடுமாற்றம் ஏற்படுகிறது. மொத்தத்தில், முதல் பாதி சுவாரஸ்யத்தை உருவாக்காமல், சாதாரணமாகவே நகர்கிறது என பதிவிட்டுள்ளார்.
35
பராசக்தி ரிவ்யூ
முதல் பாதி எதுவும் இல்லாமல் உள்ளது. காட்சி அமைப்புகள் இயல்பாகவும் நிஜத்தன்மையுடனும் இருக்கின்றன; நடிகர் தேர்வும் சரியாக வேலை செய்கிறது. ஆனால், அதற்கேற்ற அளவில் தாக்கம் இல்லாமல் கதையோட்டம் மிகவும் சலிப்பாக செல்கிறது. முழு முதல் பாதியும் சில இடங்களில் மட்டும் வரும் இந்தி எதிர்ப்பு கருத்துகளையே சார்ந்து நகர்கிறது. அதற்குப் பின்னால் ஒரு வலுவான மோதலோ, பார்வையாளரை கட்டிப்போடும் வகையிலான கதையோ இல்லாதது பெரிய குறையாக தெரிகிறது. மொத்தத்தில், ஈர்ப்பு இல்லாத முதல் பாதி என்றே சொல்லலாம் என குறிப்பிட்டுள்ளார்.
முதல் பாதி மந்தமாகவே நகர்கிறது. படம் நேரடியாக கதைக்குள் நுழைந்து, காலகட்டத்தை உணர்த்தும் இயல்பான செட்டப்புடன் தொடங்குகிறது. ஆனால் அந்த அறிமுகத்திற்குப் பிறகு, மிக மெதுவான திரைக்கதை காரணமாக கதை இழுத்துச் செல்லப்படுகிறது. முதல் பாதியின் பெரும்பாலான நேரத்தை லவ் டிராக் தான் நிரப்புகிறது. ஆனால் தேவையற்றதாக உணர்வதோடு, சலிப்பை ஏற்படுத்துகிறது. இன்டர்வல் சராசரியாக அமைந்துள்ளது. இப்போது எதிர்பார்ப்பு முழுவதும் இரண்டாம் பாதி மீதே உள்ளது என பதிவிட்டுள்ளார்.
55
பராசக்தி முதல் பாதி விமர்சனம்
முதல் பாதி முழுக்க முழுக்க மாஸ்ஸாகவும், அதே நேரத்தில் கிளாஸாகவும் அமைந்துள்ளது. இயக்குநர் சுதா, ஒவ்வொரு நடிகரிடமிருந்தும் அவர்களுடைய சிறந்த திறமையை அழகாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். சிவகார்த்திகேயன் அவருடைய நடிப்பு அசத்தல்… திரையை முழுமையாக நிரப்பும் பிரசென்ஸ்! அதர்வா & ஸ்ரீலீலா ஜோடி மிகவும் ஃப்ரெஷ். இருவரும் கதைக்குள் நன்றாக செட் ஆகி, பெரிய அளவில் ஸ்கோர் செய்கிறார்கள். இன்டர்வல் பிளாக் வேறலெவல். முதல் பாதி முடியும் போது எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு செல்கிறது. தமிழ் தீ பரவட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இப்படி பராசக்தி படத்தின் முதல் பாதிக்கு கலவையான விமர்சனங்களே வந்துள்ளன. இரண்டாம் பாதியை பொறுத்தே அப்படத்தின் ரிசல்ட் அமையும்.