நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி உள்ள வா வாத்தியார் திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் கார்த்தி நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள திரைப்படம் வா வாத்தியார். இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற அருமையான படங்களைத் தந்த நலன் குமரசாமி பல ஆண்டுகள் கழித்துத் தந்திருக்கும் படம் இது.
24
வா வாத்தியார்
மக்களுக்கு நல்லது செய்யும் இளைஞர் போராளிக் குழுவை encounter செய்ய அரசியல்வாதிகளும் காவலர்களும் திட்டமிடுகிறார்கள். அதை MGR ரசிகரான ராஜ்கிரண் வளர்க்கும் பேரன் கார்த்தி அந்த MGR ஆகவே "மாறி", முறியடிப்பது தான் கதை. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமே இதில் வரும் 'எம்.ஜி.ஆர்' (MGR) கோணம்தான்—அது மிகவும் நேர்த்தியாகவும், பழைய நினைவுகளைத் தூண்டும் விதமாகவும் கையாளப்பட்டுள்ளது. கார்த்தி தனது நடிப்பில் பட்டையைக் கிளப்பியுள்ளார்; எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தின் சாயலில் அவர் காட்டியிருக்கும் துடிப்பும் எனர்ஜியும் ரசிக்க வைக்கிறது.
34
விமர்சிக்கப்படும் கார்த்தி படம்
திரைக்கதை சற்று மெதுவாக நகர்வதும், கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திரம் வலிமையாக இல்லாததும் படத்திற்குச் சிறு தொய்வு. அதேபோல், சத்யராஜ் அவர்களின் வில்லன் கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவிற்குப் பவர்ஃபுல்லாக அமையவில்லை. பாடல்களின் எண்ணிக்கையையும் சற்றே குறைத்திருக்கலாம். கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் இப்படத்தின் வசூல் கடுமையான சரிவை சந்தித்து உள்ளது. முதல் நாளே பராசக்தியை விட மிகக் கம்மியான வசூல் செய்துள்ளது.
அதன்படி வா வாத்தியார் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் தமிழ்நாட்டில் வெறும் ரூ.1.67 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அதே நேரத்தில் பராசக்தி திரைப்படம் நேற்று தமிழகத்தில் ரூ.2.17 கோடி வசூல் செய்திருக்கிறது. முதல் நாளே பராசக்தியிடம் வசூலில் அடிவாங்கி உள்ள வா வாத்தியார் திரைப்படம், அடுத்த நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், அதிலாவது பிக் அப் ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கார்த்தியின் கடைசி இரண்டு படங்களான மெய்யழகன் மற்றும் ஜப்பான் படங்களின் முதல் நாள் வசூலைக் காட்டிலும் வா வாத்தியார் வசூல் மிகவும் கம்மி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.