வசூலில் வாங்கிய பலத்த அடி.. விரைவில் ஓடிடியில் வெளியாகும் 'தக் லைப்' திரைப்படம்??

Published : Jun 11, 2025, 05:47 PM IST

கமல் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
14
Thug Life Movie

மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. 38 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் - கமல் கூட்டணி இணைந்திருந்ததால் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாக்கியிருந்தது. கன்னட மொழி சர்ச்சை காரணமாக கர்நாடகாவில் மட்டும் படம் வெளியாகவில்லை. மற்ற நான்கு மொழிகளில் ஜூன் 5-ம் தேதி படம் வெளியாகி இருந்தது.

24
ஏமாற்றமடைந்த ரசிகர்கள்

ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. திரைக்கதை மிக மோசமாக இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். படத்திற்கான புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தீவிரமாக மேற்கொண்ட போதிலும் எதுவும் கை கொடுக்காமல் போனது. படம் முதல் நாள் மட்டுமே நல்ல வசூலை குவித்திருந்த நிலையில், அடுத்தடுத்த நாள் மிகப் பெரிய சரிவை சந்தித்தது. படத்தின் டீசர், டிரெய்லர் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்கள் தங்கள் மனதில் படம் குறித்த கற்பனையை வளர்த்திருந்தனர். ஆனால் படம் வெளியானதும் தாங்கள் கற்பனை செய்த அளவிற்கு படம் இல்லாததால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

34
5 நாட்களில் ரூ.40 கோடி மட்டும் வசூலித்த ‘தக் லைஃப்’

‘தக் லைஃப்’ ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டிருந்த நிலையில், முதல் நாள் படம் ரூ.15.5 கோடி வசூலித்திருந்தது. இரண்டாவது நாள் ரூ.7.15 கோடியும், மூன்றாவது நாள் ரூ.7.75 கோடியும், நான்காவது நாள் ரூ.6.5 கோடியும், ஐந்தாவது நாள் வெறும் ரூ.3.25 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. 5 நாள் முடிவில் இந்திய அளவில் சுமார் ரூ.40 கோடி வசூலை மட்டுமே வசூலித்திருந்தது. இது ‘இந்தியன் 2’ வசூலை விட குறைவாக இருப்பதாக திரை விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். நட்சத்திர அந்தஸ்து, மிகப்பெரிய பட்ஜெட், நடிகர்கள் பட்டாளம், இயக்குனர் என அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் திரைக்கதை நன்றாக இல்லை என்றால் படம் ஓடாது என்பதற்கு இந்த திரைப்படம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

44
விரைவில் ஓடிடியில் வெளியாகும் ‘தக் லைஃப்’

இந்த நிலையில் ‘தக் லைஃப்’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. திரையரங்குகளில் ஒரு படம் வெளியான எட்டு வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாவது வழக்கம். இந்தப் படமும் அவ்வாறே வெளியாகும் என்று கமலஹாசன் அறிவித்திருந்தார். ஆனால் மோசமான விமர்சனங்களும், குறைவான வசூலும் பெற்று வருவதால் விரைவில் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories