துபாய் என்றாலே நம் நினைவுக்கு வருவது புர்ஜ் கலீஃபா. உலகின் மிக உயரமான கட்டிடமான இதில், சினிமா டிரெய்லர்கள் மற்றும் நட்சத்திரங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் காட்டப்படும். இந்த புர்ஜ் கலீஃபாவில் ஒரு இந்திய நடிகருக்கு பிளாட் உள்ளது. இந்தியாவில் பல சூப்பர் ஸ்டார் நடிகர்கள் இருந்தாலும், புர்ஜ் கலீஃபாவில் பிளாட் வைத்திருக்கும் ஒரே நடிகர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மட்டும் தான். புர்ஜ் கலீஃபாவில் பிளாட் வாங்கிய ஒரே இந்திய நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
24
மோகன்லால் வாங்கிய பிளாட்டின் மதிப்பு எவ்வளவு?
2004-ல் தொடங்கி 2010-ல் நிறைவடைந்த புர்ஜ் கலீஃபா, துபாயில் 828 மீட்டர் உயரம் கொண்ட 163 மாடிக் கட்டிடம். இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தில் பல பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் பிளாட்கள் வாங்கியுள்ளனர். மோகன்லால் 29வது மாடியில் ஒரு படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட் வாங்கியுள்ளார். இந்த பிரம்மாண்ட பிளாட்டின் மதிப்பு 3.5 கோடி. இதை அவர் தனது காதல் மனைவி சுசித்ரா லால் பெயரில் பதிவு செய்துள்ளார்.
34
கோல்டன் விசா வைத்திருக்கும் மோகன்லால்
மோகன்லால் துபாயில் மற்றொரு சொகுசு வில்லாவில் 3BHK அபார்ட்மெண்ட் ஒன்றையும் வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற தெலுங்கு நடிகர்களுக்கும் துபாயில் சொத்துக்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. சமீபத்தில் மோகன்லால் நடித்த 'எல் 2: எம்புரான்', 'துடரும்' ஆகிய படங்கள் வசூல் சாதனை படைத்தன. புர்ஜ் கலீஃபாவில் பிளாட் வாங்கிய ஒரே இந்தியர் என்ற பெருமை மட்டுமல்ல, துபாயில் கோல்டன் விசா பெற்ற நடிகர் என்ற பெருமையையும் மோகன்லால் பெற்றுள்ளார்.
இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் ரஜினி உடன் நடிக்கிறார் மோகன்லால். இதுதவிர குட் நைட் படத்தின் இயக்குனர் விநாயக் இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்திலும் மோகன்லால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு தந்தையாக மோகன்லால் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர கன்னப்பா என்கிற பான் இந்தியா படத்திலும் நடித்து முடித்துள்ளார் மோகன்லால். அப்படம் வருகிற ஜூன் 27ந் தேதி திரைக்கு வர உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.