சன் டிவியில் நிறுத்தப்படும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் - இனி அதற்கு பதில் இந்த சீரியலா?

Published : Jun 11, 2025, 02:07 PM IST

சன் டிவியில் பிரைம் டைம் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் மறு ஒளிபரப்பை அதிரடியாக நிறுத்தி உள்ளனர்.

PREV
14
Ethirneechal thodargirathu Serial

சன் டிவியில் சக்கைப்போடு போட்ட சீரியல்களில் எதிர்நீச்சல் சீரியலும் ஒன்று. இந்த சீரியல் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சன் டிவியில் கோலங்கள் போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கிய திருச்செல்வம் தான் எதிர்நீச்சல் சீரியலையும் இயக்கினார். இந்த சீரியல் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் இருந்தே பிக் அப் ஆனது. இந்த சீரியல் காட்சிகளை எடுத்து மீம்ஸ் உருவாக்கி அதை டிரெண்ட் ஆக்கினர். இதனால் இளைஞர்கள் மத்தியிலும் எதிர்நீச்சல் சீரியலுக்கு நல்ல கிரேஸ் இருந்தது.

24
எதிர்நீச்சல் சீரியல் ஹிட்டாக காரணம் என்ன?

எதிர்நீச்சல் சீரியல் சென்சேஷனல் ஹிட் அடிக்க முக்கிய காரணமாக இருந்தது ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து தான். அவரின் வில்லத்தனமான நடிப்பும் டைமிங் வசனங்களும் அந்த சீரியலை தூக்கி நிறுத்தியது. இதனால் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியிலும் கெத்து காட்டி நம்பர் 1 இடத்தில் இருந்தது. இந்த சீரியலை எந்த சீரியல்களாலும் தொட முடியாது என சொல்லும் அளவுக்கு டாப் கியரில் சென்று கொண்டிருந்த எதிர்நீச்சல் சீரியலுக்கு பேரிடியாக ஒரு சம்பவம் நடந்தது.

34
திடீரென முடிக்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியல்

எதிர்நீச்சல் சீரியலின் முதுகெலும்பாக இருந்தார் மாரிமுத்து. அவர் கடந்த 2023-ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததால், அந்த சீரியலுக்கு அது பெரும் பின்னடைவாக அமைந்தது. அவருக்கு பதில் வேல ராமமூர்த்தி, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இருந்தாலும் அவரால் மாரிமுத்து அளவுக்கு அந்த கேரக்டருக்கு உயிர் கொடுக்க முடியவில்லை. இதனால் எதிர்நீச்சல் சீரியல் கடந்த ஆண்டு மே மாதம் நிறுத்தப்பட்டது.

44
எதிர்நீச்சல் 2 சீரியலும் நிறுத்தம்

இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது. மதுமிதா தவிர முதல் பாகத்தில் நடித்த அனைவரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நடித்து வந்தனர். ஆனால் இந்த முறை கதை மற்றும் திரைக்கதை சொதப்பியதால், எதிர்நீச்சல் 2 சீரியலுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த சீரியல் டிஆர்பியிலும் நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. இந்த சீரியல் தினசரி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பப்படுவது மட்டுமின்றி காலையிலும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.

ஆனால் அதற்கு வரவேற்பு இல்லாததால், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் மறு ஒளிபரப்பை நிறுத்த முடிவு செய்துள்ளது சன் டிவி. அதன்படி வருகிற ஜூன் 16ந் தேதி முதல் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் காலை மறு ஒளிபரப்பு செய்யப்படாதாம். அதற்கு பதிலாக சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான நந்தினி தொடர் ஜூன் 16ந் தேதியில் இருந்து காலை 9.30 மணி முதல் 11 மணிவரை ஒளிபரப்பு செய்யப்படுமாம். இந்த சீரியலை சுந்தர் சி இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories