சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் சன் டிவி சீரியல் நடிகைகள் - ஆத்தாடி இவ்வளவா?

Published : Jun 08, 2025, 11:27 AM IST

சன் டிவியில் மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, லெட்சுமி, கயல், மருமகள், பூங்கொடி, மல்லி ஆகிய தொடர்களில் நடிக்கும் நாயகிகளின் சம்பள விவரத்தை பார்க்கலாம்.

PREV
16
Sun TV Serial Actress Salary

சீரியல்கள் என்றாலே அது சன் டிவி தான் என சொல்லும் அளவுக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சின்னத்திரை சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது சன் தொலைக்காட்சி. அதில் தற்போது காலை 11 மணி முதல் இரவு 11 மணிவரை வித்தியாசமான கதைக்களத்துடன் கூடிய ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கும் சம்பளம் வாரி வழங்கப்பட்டு இருக்கிறது. அப்படி சன் டிவி சீரியல்களில் நடிக்கும் நாயகிகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

26
சன் டிவி சீரியல் நடிகைகள் சம்பளம்

சன் டிவியில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியலான சிங்கப்பெண்ணேவில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷா மகேஷுக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். அதேபோல் இலக்கியா சீரியலில் இலக்கியாவாக நடித்து வரும் நடிகை நடிகை ஷாம்பவி குருமூர்த்திக்கு ஒரு நாளைக்கு ரூ.18 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறாராம். புதுவசந்தம் சீரியலில் செல்வியாக நடிக்கும் சோனியா சுரேஷ் ஒரு நாளைக்கு 16 ஆயிரம் வாங்குகிறார்.

36
மூன்று முடிச்சு சீரியல் நாயகி சம்பளம்

சன் டிவியின் மற்றொரு டிரெண்டிங் சீரியலான மூன்று முடிச்சு தொடரில் நந்தினியாக நடிக்கும் நடிகை ஸ்வாதி கொண்டே ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறாராம். மல்லி சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை ரிகிதா ராஜேஷுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம். அதேபோல் பூங்கொடி சீரியலில் பூங்கொடியாக நடிக்கும் ஸ்வேதா ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகின்றாராம்.

46
எதிர்நீச்சல் 2 சீரியல் நடிகைகள் சம்பளம்

எதிர்நீச்சல் 2 சீரியலில் ஜனனியாக நடிக்கும் பார்வதி மற்றும் நந்தினியாக நடிக்கும் ஹரிப்பிரியா ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ரூ.18 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் அந்த சீரியலில் மற்றொரு நாயகியான நடிகை கனிகா, ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதற்காக அவர் ரூ.15 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறார். இதுதவிர ரேணுகாவாக நடிக்கும் நடிகை பிரியதர்ஷினி ரூ.12 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

56
மருமகள் சீரியல் கேபி சம்பளம்

லெட்சுமி சீரியலில் மகாவாக நடிக்கும் ஸ்ருதி ராஜுக்கு ரூ.20 ஆயிரமும், அன்னம் சீரியலில் அன்னலட்சுமியாக நடித்து வரும் நடிகை அபி நக்‌ஷத்ராவுக்கு ரூ. 16 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்படுகிறது. மருமகள் சீரியலில் ஆதிரையாக நடிக்கும் நடிகை கேப்ரியல்லா ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறார். இதேபோல் மருமகளே வா சீரியலில் நர்மதாவாக நடிக்கும் ஹரிகாவுக்கு ஒரு நாளைக்கு ரூ.16 ஆயிரம் வழங்கப்படுகிறது.

66
சன் டிவியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார்?

சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட ஆடுகளம் சீரியலில் நாயகியாக நடிக்கும் டெல்னா டேவிஸ் மற்றும் ஆனந்த ராகம் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் அனுஷா ஆகியோர் ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறார். அதேபோல் புனிதா சீரியல் நாயகி நிமேஷிகா ரூ.18 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறார். வினோதினி சீரியல் ஆர்த்திகாவும் ஒரு நாளைக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார். சன் டிவியில் அதிக சம்பளம் வாங்குவது சைத்ரா ரெட்டி தான். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம்.

Read more Photos on
click me!

Recommended Stories